நாட்டில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை

புதன், 18 ஆகஸ்ட், 2021

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.ட்விட்டர்
 பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், நாடு முகங்கொடுத்துள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இவ்வருடத்தின், 
முதல் 6 மாதங்களில் இறக்குமதி செலவுகளில் 18 சதவீதமானவை எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
இந்தத் தொகையானது வருடத்தின் இறுதி 6 மாதங்களில் 25 சதவீதம் வரையில் உயர்வடையக்கூடும் என அமைச்சர் கம்மன்பில 
சுட்டிக்காட்டியுள்ளார்
எனவே, மருந்துப்பொருட்கள் மற்றும் தடுப்பூசிகள் போன்றை அத்தியாவசிய பொருட்களுக்காக ஒதுக்கங்களை மேற்கொள்வதற்காக எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்துமாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக