அம்பாறை ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் வருடாந்த மகோற்சவம் நடைபெறாது

புதன், 11 ஆகஸ்ட், 2021

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அம்பாறை  மாவட்டம், ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இம்முறை நடைபெறாது என ஆலயத்தின் தலைவர் ஆர்.ஜெகநாதன் 
தெரிவித்தார்.
எனினும் விசேட அபிசேக பூஜைகள் மாத்திரம் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ளப்  பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும்
 குறிப்பிட்டார்.
ஆலய மகோற்சவம் தொடர்பாக 10-08-2021.அன்று  இடம்பெற்ற ஆலய நிருவாக சபைக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக 
அவர் கூறினார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக