உணவில் அதிகளவில் உப்பினை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அதன்படி அதிகளவான உப்பு உட்கொள்ளல் தொற்று நோய்கள் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள மக்கள் அதிகளவு உப்பை உட்கொள்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளதாக கணக்கெடுப்பில்
தெரியவந்துள்ளது.
வீட்டு உணவுகளில் அன்றாடம் உப்பை சேர்க்கும் போது குறைவான உப்பைப் பயன்படுத்துவது மிகவும் நல்ல ஆரோக்கிய பழக்கம்.அத்துடன் சோறு சமைக்கும்போது ஒரு சிட்டிகை உப்பை சேர்ப்பது
தேவையற்றது.
தேவேளை கருவாட்டிலுள்ள அதிகப்படியான உப்பை தேங்காய் நீரில் அரை மணி நேரம் ஊறவைப்பதன் மூலம் அகற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக