கைதடியில் முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு கெஞ்சிய வயோதிபர்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர், தன்னையும் முதியோர் இல்லத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கைதடி முதியோர் இல்லத்தின் வெளிவாயிலில் நின்று வீறிட்டு அழுது குழறிய நெஞ்சைப் பிசையும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அவரது துயரநிலையை கவனத்தில் கொண்ட இல்ல நிர்வாகம், உடனடியாக அவரை இல்லத்தில் சேர்த்துக் கொண்டது.
வட்டுக்கோட்டையை சேர்ந்த சபாபதிப்பிள்ளை இராஜகோபால் (85) என்பவரே இல்லத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முதியவராவார்.
கடந்த ஏழு வருடமாக கொழும்பில் 
உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தேன் என்றும், தறபோது உறவினர்கள் யாருமின்றி வாழ்வதற்கு சிரமப்படுவதாகவும் அவர் தெரிவித்தார் என்றும் கைதடி முதியோர் இல்ல நிர்வாகம் 
தெரிவித்துள்ளது.
உடல்நலம் குன்றிய நிலையில், அடுத்து என்ன செய்வதென தெரியாத நிலையில், முதியோர் இல்லா வாயிலுக்கு வந்து தன்னை இணைத்துக்கொள்ளும்படி கோரியிருக்கிறார். முதியோர் இல்லத்தில் இணைப்பதற்கான நிர்வாக நடைமுறையை 
குறிப்பிட்டபோது, தனது உடல்நிலையை குறிப்பிட்டு வீறிட்டு அழுதுள்ளார். இதையடுத்து அவரை இல்லத்தில் இணைத்துக்கொள்ள நிர்வாகம் உடனடி நடவடிக்கையெடுத்தது.
அவர் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள வசதியாக அவரது உறவினர்கள் இல்லத்துடன் தொடர்புகொள்ளுமாறு இல்லத்தின் அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக