யாழ். மாணவன் உயர்தர பரீட்சையில் சாதனைப் படைத்துள்ளார்

திங்கள், 31 டிசம்பர், 2018

தனது இரு கண்களை இழந்தபோதும், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று யாழ். மாணவன் சாதனைப் படைத்துள்ளார்.
யாழ். யூனியன் கல்லூரி மாணவன் தவராசா அன்ரூ ஜெக்சன், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் மூன்றாவது இடத்தைப்பெற்று இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.
தனது 15ஆவது வயதில் கிரிக்கெட் விளையாடும்போது, பந்து நெற்றியில் பட்டதால் இரு கண்களின் பார்வையையும் 
அவர் இழந்துள்ளார்.
சிகிச்சைகள் காரணமகா இரண்டு வருடங்கள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டாலும் அவரது அயராத முயற்சியின் காரணமாக சிறந்த பெறுபேறினைப்பெற்று இன்று அவர் தனது குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் பெறுமை சேர்த்துள்ளார்.
அவர் கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்திலும் சிறந்த பெறுபேறினைப்பெற்று ஜனாதிபதியிடம் இருந்து பரிசில்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
யாழ். சுன்னாகத்தில் அமைந்துள்ள விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகத்தில் தங்கியிருந்து, யாழ். யூனியன் கல்லூரியில் கல்வி பயின்று இவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இவரது தந்தை கடற்தொழிலாளியாகவும், தாய் வீட்டுப்பணிப்பெண்ணாகவும் உள்ளதுடன் நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூன்றாமவராக
 இவர் உள்ளார்.
இது குறித்து ஜெக்சன் குறிப்பிடுகையில்,

எனது ஆசை சட்டத்தரணியாவதே, அதற்கு பாரிய முயற்சியும் பொருளாதார வசதியும் தேவை.
முயற்சி என்னிடம் உள்ளது, போதிய பொருளாதார வசதி என்னிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக