இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது.
இதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு நிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணத்திலும் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் பல பிரதேசங்களில் மாலை நேரத்தில் அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யும். மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணத்திலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்ய கூடும் என திணைக்களம்
தெரிவித்துள்ளது.
மேல், கிழக்கு மற்றும் வட மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்தின் கடல் பிரதேசங்களிலும், காலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிமாக கடும் காற்று வீசக்கூடும். இடி, மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக