நாவற்­கு­ழி­யில் ஆறு வயதுச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்த முதியவர்

புதன், 26 செப்டம்பர், 2018

ஆறு வய­துச் சிறு­மி­யின் கையைப் பிடித்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் 70 வயது முதி­ய­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்பாணம்
 நாவற்­கு­ழி­யில் வீதி­யில் நடந்து சென்ற சிறு­மி­யின் கையை தவ­றான நோக்­கத்­து­டன் முதி­ய­வர் பிடித்து இழுத்­தார் என சிறு­மி­யின் பெற்­றோ­ரால் சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.
விசா­ரணை மேற்­கொண்ட பொலி­ஸார் 
முதி­ய­வ­ரைக் கைது செய்து நேற்­று­முன்­தி­னம் சாவ­கச்­சேரி பதில் நீதி­வா­னி­டம் முற்­ப­டுத்­தி­னர். வழக்கை விசா­ரித்த சாவ­கச்­சேரி நீதி­மன்ற பதில் நீதி­வான் முதி­வரை 14 நாள்­கள் விளக்­க­ம­றி­ய­லில் 
வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டார்.
சிறுமி மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார். சிறுமி பாலி­யல் தொல்­லைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று மருத்­துவ அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதாகத் 
தெரி­விக்­கப்­படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக