வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் இலங்கை பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது.
இதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு நிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணத்திலும் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் பல பிரதேசங்களில் மாலை நேரத்தில் அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யும். மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணத்திலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்ய கூடும் என திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
மேல், கிழக்கு மற்றும் வட மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்தின் கடல் பிரதேசங்களிலும், காலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிமாக கடும் காற்று வீசக்கூடும். இடி, மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை 
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் இலங்கை பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாவற்­கு­ழி­யில் ஆறு வயதுச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்த முதியவர்

புதன், 26 செப்டம்பர், 2018

ஆறு வய­துச் சிறு­மி­யின் கையைப் பிடித்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் 70 வயது முதி­ய­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்பாணம்
 நாவற்­கு­ழி­யில் வீதி­யில் நடந்து சென்ற சிறு­மி­யின் கையை தவ­றான நோக்­கத்­து­டன் முதி­ய­வர் பிடித்து இழுத்­தார் என சிறு­மி­யின் பெற்­றோ­ரால் சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.
விசா­ரணை மேற்­கொண்ட பொலி­ஸார் 
முதி­ய­வ­ரைக் கைது செய்து நேற்­று­முன்­தி­னம் சாவ­கச்­சேரி பதில் நீதி­வா­னி­டம் முற்­ப­டுத்­தி­னர். வழக்கை விசா­ரித்த சாவ­கச்­சேரி நீதி­மன்ற பதில் நீதி­வான் முதி­வரை 14 நாள்­கள் விளக்­க­ம­றி­ய­லில் 
வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டார்.
சிறுமி மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார். சிறுமி பாலி­யல் தொல்­லைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று மருத்­துவ அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதாகத் 
தெரி­விக்­கப்­படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாவற்­கு­ழி­யில் ஆறு வயதுச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்த முதியவர்

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ வடக்கு கிழக்கில்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

நாட்டின் வடக்கு கிழக்கு வடமத்திய ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ 
பெய்யக் கூடும்
சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது..
சப்ரகமுவ மாகாணத்தில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் பல தடவை சிறிதளவில் மழை பெய்யுமென 
எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள
 தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது..
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ வடக்கு கிழக்கில்

சாவகச்சேரியில் உள்ள நிதி நிறுவத்தில் பணம் கொள்ளை

புதன், 19 செப்டம்பர், 2018

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பெருமளவு பணம் இன்று காலை 8.30 மணி அளவில் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.சுமார் 18 லட்சம் 
ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.இன்று காலை வழமைபோலன நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர். இதன்போது கத்தியோடு உள்நுழைந்த திருடன் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு
 சென்றுள்ளான்.
உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சாவகச்சேரியில் உள்ள நிதி நிறுவத்தில் பணம் கொள்ளை

ஆறுதல் செய்தி சீனியின் விலையில் மாற்றமில்லையாம்

சீனியின் விலை எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.சீனி கிலோகிராம் ஒன்றுக்கு 18.50 இறக்குமதி வரியாக விதிக்கப்பட்டுள்ளது.
சீனிக்கு இதுவரையில் காணப்பட்ட வற் வரி 15 வீதத்தினாலும், சுங்கத்தீர்வை 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட மாத்திரத்தில் சீனியின் விலையை அதிகரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன், இந்தியா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் சீனி உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைவடைந்துள்ள நிலையில், அந்த நலன் நுகர்வோரை சென்றடையவில்லை என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.எனவே, சீனியின் விலையை உயர்த்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென 
தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - ஆறுதல் செய்தி சீனியின் விலையில் மாற்றமில்லையாம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

.ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பில்
 விரைவில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இதன்மூலம், புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் இரு மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
மேலும், தற்போது வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும்
 தெரிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி

வறட்சியால் நெடுந்தீவில் குதிரைகள் உள்ளிட் கால்நடைகள் இறப்பு

திங்கள், 17 செப்டம்பர், 2018

நெடுந்தீவில் வறட்சியின் கொடுமையால் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அங்குள்ள குதிரைகள் உரிய பராமரிப்பு இன்மையால் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயத்தில் செய்யவேண்டியவற்றைச் செய்துள்ளோம்.
மேலதிக நடவடிக்கைகள் பற்றிய திட்டங்கள் எதுவும் அதிகாரிகளிடம் இல்லை அவர்களே கூறுகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
READ MORE - வறட்சியால் நெடுந்தீவில் குதிரைகள் உள்ளிட் கால்நடைகள் இறப்பு

வேற்றுக்கிரக வாசிகள் பூமியில் ஊடுருவியுள்ள காணொளி

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்துள்ளதாக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உறுதியாகவே நம்புகின்றார்கள்.
வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்தது உண்மையானால், அதற்கான ஆதாரங்கள் – பூமியில் நிச்சயம் இருந்தாகவேண்டும்.
வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்துள்ளன என்பதை நிரூபிப்பதற்கு ஏதுவாக எம்மைச் சூழ நிறைந்துகிடக்கும் சில ஆதாரங்களைத தேடுவதற்கு முயல்கின்றது இந்த 
உண்மையின் தரிசனம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



                  
READ MORE - வேற்றுக்கிரக வாசிகள் பூமியில் ஊடுருவியுள்ள காணொளி

அரச பேரூந்தில் மாட்டிய கஞ்ச வவுனியாவில் நடந்த திடீர் தேடுதல்

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து 
கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தை, வவுனியாவில் வைத்து பொலிஸார் திடீர் சோதனை நடத்தினர்
இதன்போது பயணப்பையில் கேரள கஞ்சாவினை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
.குறித்த நபர் இரணைமடு சந்தியிலிருந்து பேருந்தில் பயணித்ததாகவும் இவரிடமிருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் நிறை மற்றும் பெறுமதி என்பவற்றை பின்னரே தெரிவிக்க முடியுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக குறித்த அரச பேருந்து நொச்சிமோட்டை பாலத்தடியில் தரித்து நின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - அரச பேரூந்தில் மாட்டிய கஞ்ச வவுனியாவில் நடந்த திடீர் தேடுதல்

கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மிகவும் வேகத்துடன் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாகவிருந்த மின்கம்பத்துடன் சடுதியாக மோதியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்  06.09.2018. பிற்பகல்-06.30 மணியளவில்
 யாழ்.வடமராட்சி துன்னாலை கடவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்
.துன்னாலை வேம்படிப் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி காந்தீபன்(வயது-25) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;குறித்த இளம் குடும்பஸ்தர் நேற்றுப் பிற்பகல் யாழ்.துன்னாலையிலிருந்து குடவத்தைப் பகுதி நோக்கி அதிவேகமாக மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச்
 சென்றுள்ளார்.
இதன் போது குடவத்தைப் பகுதியில் அவர் செலுத்திச் சென்ற மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்கம்பத்துடன் சடுதியாக மோதுண்டுள்ளது.சம்பவத்தில்
 படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லும் வழியில் 
உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் யாழ்.துன்னாலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி

அச்சுவேலி மக்களுக்கு23 வருடங்களின் பின்னர் விடிவு

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

யாழ் அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்பு படையினர் வசமிருந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது
6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியே நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது.கடந்த 1995ஆம் ஆண்டு
 முதல் குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள் அச்சுவேலி
 இராணுவ முகாமிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
நான்கு வருட போராட்டங்களின் பின் காணிகள் மக்களுக்கு கிடைத்துள்ளன.மேலும், ஏற்கனவே ஒன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த 2 ஏக்கர் காணியே நேற்று 
விடுவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - அச்சுவேலி மக்களுக்கு23 வருடங்களின் பின்னர் விடிவு