புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் போது ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்ட புகைப்படப்பிடிப்பாளரிடமிருந்து புகைப்படங்களைப் பெறுமாறு ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
இம் மாதம் முதல் புதிய தேசிய அடையாள அட்டைக்காக, தேசிய சிவில் விமான ஒழுங்கமைப்பு தரத்திலான புகைப்படம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்
குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, புதிய இலத்திரனியல் அடையாள அட்டைக்கான உரிய புகைப்படம் எடுத்தல் தொடர்பாக தகைமையுடைய புகைப்பட நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2017/09/01 ஆம் திகதியிலிருந்து தங்களால் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் போது கீழ்க்காணும் தரத்திலான புகைப்படத்தினை உபயோகப்படுத்தும்படி
கோரப்பட்டுள்ளது.
இவ்வாறான புகைப்படத்தினை பெற்றுக்கொள்வதற்காக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்ட புகைப்படப்பிடிப்பாளரிடம் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
9,16 மற்றும் 17 என்னும் பிரிவுகளின் நோக்கங்களுக்காகச் சமர்ப்பிக்கப்படுவதற்குத் தேவைப்படுத்தப்படும் அத்தகைய ஒவ்வொரு நிழற்படமும் பின்வரும் பரிமாணங்களையும், அளவுக்குறிப்பீடுகளையும், நியமங்களையும் மற்றும் தரத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.
நிழற்பட அளவானது, அகலத்தில் 35 மி.மீ. உயரத்தில் 45 மி.மீ. என்பதாகவிருத்தல் வேண்டுமென்பதுடன், நிழற்படத்தின் தரமானது, ஆட்களைப் பதிவு செய்தல் ஆணையாளர் தலைமையதிபதியினால் ஏற்பாடு செய்யப்படும் மென்பொருளுக்கிணங்க அல்லது அறிவுறுத்தல்களுக்கிணங்க
இருத்தல் வேண்டும்.
முகமானது, திறந்த மற்றும் தெளிவாகத் தென்படக்கூடிய கண்களுடனும், மூடிய வாயுடனும், சிரிப்பில்லாமலும், சுயநிலை முகக் குறிப்புடன் இருத்தல் வேண்டும்.
தலைமுடியானது, முகத்திலிருந்து விலகியிருத்தல் வேண்டுமென்பதுடன், முகத்தின் விளிம்புகள் தெளிவாகத் தென்படக்கூடியனவாக
விருத்தலும் வேண்டும்.
மூக்குக் கண்ணாடிகளிலிருந்து (ஏற்புடையதாயின்) பிரதிபலிப்புகள் எவையும் தென்படக்கூடியனவாகவிருத்தலாகாது.
வில்லைகளினூடாகக் கண்கள் தெளிவாகத் தென்படக்கூடியனவாக இருத்தல் வேண்டுமென்பதுடன், தெளிவான (நிறப்பூச்சிடப்படாத) வில்லைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
வெளிச்சமிடுகை ஒரு சீரானதாக இருத்தல் வேண்டுமென்பதுடன், நிழல்களை, கூசொளியை அல்லது பளிச்சிட்டுப் பிரதிபலிப்புகளைக் காண்பித்தலுமாகாது.
நிழற்படத்தின் காட்சிப்படுத்தலும் வெண்நிறப் பின்புலமும் விண்ணப்பகாரரின் இயற்கையான தோல் நிறத்தைப் பிரதிபலித்தல் வேண்டும்.
தோற்றநிலை நேராகவிருத்தல் வேண்டுமென்பதுடன், முகமும் தோள்களும் நிழற்படக் கருவிக்கு நடுவிலும் எல்லாப் புறமும் சரிசமமாகவும் இருத்தலும் வேண்டும். பின்னணியானது, ஒரு சீராகவும் அலங்காரங்களின்றியும் வடிவங்களில்லாமலும் இளநீல நிறத்திலும்
இருத்தல் வேண்டும்.
உருவமானது, தெளிவாகவும் கூர்மையாகவும் ஒரு நிலைப்படுத் தப்பட்டதாகவும் இருத்தல் வேண் டும்.
நிழற்படமானது, உயர்தொழில்சார் அச்சிடும் ஆய்வுகூடத்தைப் பயன்படுத்தி நிறத்தில் அச்சிடப்படுதல் வேண்டும். எவ்வகையிலும் மாற் றப்படுத்தலாகாதென்பதுடன், விண் ணப்பகாரரின் இயற்கை நிலையில் எடுக்கப்படுதலும் வேண்டும் எனவும்
கேட்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக