பொலிஸாருக்கு வாள் வெட்டுச் தகவல் அறிவித்து 2 மணித்தியாலம் கழித்தே சென்றனர்

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கிளிநொச்சி ஏ-9 வீதி பரந்தனுக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் குறித்து பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான 119 இற்கு அறிவித்து தகவல் வழங்கப்பட்டு இரண்டு மணித்தியாலம் கழித்தே அவ்விடத்திற்குப் பொலிஸார் சென்றுள்ளார்கள் என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தன் ஸ்ரார் றெஸ்ற் இல் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு பெரும் குழப்பமாக மாறி
 வாள் வெட்டில் முடிந்துள்ளது.
அதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேற்படி ஸ்ரார் றெஸ்ற் இல் மாலை 3.10 மணியளவில் 
இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினர் அங்கிருந்து வெளியேறி பரந்தன் சந்திப் பக்கமாகச் சென்று வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் மேற்படி ஸ்ரார் றெஸ்ற் நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை 
அவதானித்தவர்கள்.
உடனடியாகவே மாலை 3.20 மணியளவில் பொலிசாரின் அவசர சேவை இலக்கமான 119 இற்கு அழைத்து அறிவித்து இரண்டு மணித்தியாலம் கடந்தும் அவ்விடத்திற்குப் பொலிஸார் எவரும் செல்லவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
வாள் வெட்டு இடம்பெறுவதற்கு முன்னதாக தகராறு ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட போது அவ்விடத்திற்குப் பொலிஸார் சென்றிருந்தால் இரு குழுக்களையும் கைதுசெய்து குற்றச்சம்பவத்தினைத் தடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
மேற்படி சம்பவம் இடம்பெற்ற ஸ்ரார் றெஸ்ற் ஹோட்டல், அதனை அண்டியுள்ள ஏ-9 வீதிப் பகுதிகளில் அடிக்கடி குழு மோதல்கள் இடம்பெற்று வருவதாகப் பலராலும் கூறிக் கவலையும் விசனமும்
 தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி ஸ்ரார் றெஸ்ற் ஹோட்டலில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டு வேறு ஒரு இடத்தில் வீசப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கதாகும்.
அடிக்கடி தகராறு இடம்பெறும் ஸ்ரார் றெஸ்ற் ஹோட்டலில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் கரைச்சிப் பிரதேசசபைக்குட்பட்டதாகவே மேற்படி மது விற்பனை நிலையம் காணப்படுகின்றது. கரைச்சிப் பிரதேசசபையின் செயலாளர் சாதாரண பொது மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக வர்த்தக நிலையங்களில் பொருட்கள் விற்றல்,
வர்த்தக நிலையங்களுக்கான அனுமதி போன்றவற்றில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை பிரயோகித்து வரும் மேற்படி செயலாளர் தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் பலவற்றிலுள்ள ஹோட்டல்களில் அனுமதியற்ற மதுபான விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறுவதைக் கண்டும் காணாமல் விட்டுள்ளதாகக் 
கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக