பொலிஸாருக்கு வாள் வெட்டுச் தகவல் அறிவித்து 2 மணித்தியாலம் கழித்தே சென்றனர்

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கிளிநொச்சி ஏ-9 வீதி பரந்தனுக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் குறித்து பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான 119 இற்கு அறிவித்து தகவல் வழங்கப்பட்டு இரண்டு மணித்தியாலம் கழித்தே அவ்விடத்திற்குப் பொலிஸார் சென்றுள்ளார்கள் என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தன் ஸ்ரார் றெஸ்ற் இல் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு பெரும் குழப்பமாக மாறி
 வாள் வெட்டில் முடிந்துள்ளது.
அதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேற்படி ஸ்ரார் றெஸ்ற் இல் மாலை 3.10 மணியளவில் 
இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினர் அங்கிருந்து வெளியேறி பரந்தன் சந்திப் பக்கமாகச் சென்று வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் மேற்படி ஸ்ரார் றெஸ்ற் நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை 
அவதானித்தவர்கள்.
உடனடியாகவே மாலை 3.20 மணியளவில் பொலிசாரின் அவசர சேவை இலக்கமான 119 இற்கு அழைத்து அறிவித்து இரண்டு மணித்தியாலம் கடந்தும் அவ்விடத்திற்குப் பொலிஸார் எவரும் செல்லவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
வாள் வெட்டு இடம்பெறுவதற்கு முன்னதாக தகராறு ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட போது அவ்விடத்திற்குப் பொலிஸார் சென்றிருந்தால் இரு குழுக்களையும் கைதுசெய்து குற்றச்சம்பவத்தினைத் தடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
மேற்படி சம்பவம் இடம்பெற்ற ஸ்ரார் றெஸ்ற் ஹோட்டல், அதனை அண்டியுள்ள ஏ-9 வீதிப் பகுதிகளில் அடிக்கடி குழு மோதல்கள் இடம்பெற்று வருவதாகப் பலராலும் கூறிக் கவலையும் விசனமும்
 தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி ஸ்ரார் றெஸ்ற் ஹோட்டலில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டு வேறு ஒரு இடத்தில் வீசப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கதாகும்.
அடிக்கடி தகராறு இடம்பெறும் ஸ்ரார் றெஸ்ற் ஹோட்டலில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் கரைச்சிப் பிரதேசசபைக்குட்பட்டதாகவே மேற்படி மது விற்பனை நிலையம் காணப்படுகின்றது. கரைச்சிப் பிரதேசசபையின் செயலாளர் சாதாரண பொது மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக வர்த்தக நிலையங்களில் பொருட்கள் விற்றல்,
வர்த்தக நிலையங்களுக்கான அனுமதி போன்றவற்றில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை பிரயோகித்து வரும் மேற்படி செயலாளர் தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் பலவற்றிலுள்ள ஹோட்டல்களில் அனுமதியற்ற மதுபான விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறுவதைக் கண்டும் காணாமல் விட்டுள்ளதாகக் 
கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>>>


READ MORE - பொலிஸாருக்கு வாள் வெட்டுச் தகவல் அறிவித்து 2 மணித்தியாலம் கழித்தே சென்றனர்

சிறையிலிருந்து நூதனமான முறையில் சுவரைத் துளைத்து தப்பிய கைதி!

சனி, 23 செப்டம்பர், 2017

நேற்றிரவு நடந்த இந்தச் சம்பவத்தால் களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக நபர் ஒருவர், மாத்துகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் புளத்சிங்கள பொலிஸ் நிலைய தடுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு தடுப்பறையின் கழிப்பறைக்குள் சென்று அதன் ஒருபக்கச் சுவரை மிகவும் நூதனமான முறையில் துளையிட்டுள்ளார். பின்னர் 
அந்தத் துளையினூடாக வெளியேறி பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபரைக் காண்பதற்காக அவரது உறவினர்கள் நேற்றிரவு பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அதன்போது குறித்த நபரை தடுப்பறையில் தேடிய பொலிஸார் அங்கு அவர் இல்லாமை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கழிப்பறைப்பக்கம் சென்று பார்த்தபோதே அவர் துளையிட்டுத் தப்பிச் சென்ற 
விடயம் தெரியவந்தது.
சந்தேக நபரைத் தீவிரமாகத் தேடிவந்த பொலிஸார் இன்று முற்பகல் மீண்டும் அவரைக் கைது செய்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் $தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - சிறையிலிருந்து நூதனமான முறையில் சுவரைத் துளைத்து தப்பிய கைதி!

புதிய இரண்டு பாடத்திட்டம் அறிமுகம் O/L சித்தியடையாத மாணவர்கள் A/L படிக்க?

வியாழன், 21 செப்டம்பர், 2017

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத  மாணவர்கள், உயர்தரக் கல்வியை தொடருவதற்காக புதிய இரண்டு பாடத்திட்டங்களை அடுத்த மாதத்திலிருந்து  அறிமுகப்படுத்த இருப்பதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பாடத்திட்டத்தில், உளவியல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, விளையாட்டு, உடற்கல்வி மற்றும் கிராஃபிக் வடிவமைப்பு, ஃபேஷன் வடிவமைப்பு, கட்டுமான தொழில்நுட்ப ஆய்வு,    நீர் வளங்கள் தொழில்நுட்ப ஆய்வு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படயிருப்பதாக தெரிவித்துள்ளது.
13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதுடன்,  தற்போது இருக்கும் உயர்தரப் பாடத்திட்டங்களுக்கு மேலாக, பொது பாடத்திட்டம் மற்றும் பிரயோக பாடத்திட்டங்கள் என்ற முக்கிய பிரிவுகள் இரண்டில் இவை கொண்டுவரப்படும் என, கல்வி அமைச்சர் அகில விராஜ்
 காரியவசம் தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - புதிய இரண்டு பாடத்திட்டம் அறிமுகம் O/L சித்தியடையாத மாணவர்கள் A/L படிக்க?

மழையால் அழிந்த 100 ஏக்கர் வெங்காய பயிர்ச்செய்கை

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஹபரணை , புவக்பிடிய மற்றும் மீகஸ்வெவ போன்ற பிரதேசங்களில் பயிரிடப்பட்டிருந்த வெங்காய பயிர்களே இவ்வாறு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
    மேலும் கடும் மழை காரணமாக வேறு பயிர்களும் அழிந்து விட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மழையால் அழிந்த 100 ஏக்கர் வெங்காய பயிர்ச்செய்கை

இளைஞர் ஒருவர் பொரளையில் கொலை செய்யப்பட்டுள்ளார்

பொரளை, வனாதமுல்லை, லெஸ்லி ரனகல பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்
கொலை செய்யப்பட்ட இளைஞர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சந்துன் தாரிக லக்ஷிக எனவும் இளைஞரை
 இனந்தெரியாத இருவர் வெட்டியுள்ளதாகவும், வெட்டுக்காயங்களுக்குள்ளான இளைஞர் அவ்விடத்திலேயே விழுந்துள்ளார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
     வெட்டுக்காயங்களுக்குள்ளாகி விழுந்து கிடந்த குறித்த இளைஞரை அப்பகுதி மக்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
     குறித்த இளைஞர் சர்ச்சைக்குரிய செயற்பாடுகளிலோ அல்லது கடத்தல் செயற்பாடுகளிலோ தொடர்புபட்டவர் என்பதற்கான எவ்வித பதிவுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இளைஞர் ஒருவர் பொரளையில் கொலை செய்யப்பட்டுள்ளார்

கடந்த 13 ஆம் திகதி முதல் தொடரும் பணியாளர்களின் போராட்டம்…!

 தொடர்ச்சியாக இலங்கை மின்சாரசபை பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் நடைபெறுகின்றது.
    மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறியே இந்த ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
    மின்சார சபை ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டாலும் மின்விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லையென மின்வலுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் ஊழியர்களின் இந்த போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய 
குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கடந்த 13 ஆம் திகதி முதல் தொடரும் பணியாளர்களின் போராட்டம்…!

கட்டுரை வரைதல் போட்டியில் முல்லை மாணவி சாதனை.

புதன், 13 செப்டம்பர், 2017

தேசிய மட்ட தமிழ்தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை ம.வி மாணவியான  பகீரதன் லாசன்ஜா பிரிவு -2 ல் இருந்து   பங்கு பற்றி முதலாமிடத்தை பெற்றிருந்தார்.
கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் தேசிய ரீதியாக   நடாத்தப்பட்ட    தமிழ்தின போட்டியில்  கலந்து கொண்டிருந்தார். இம் மாணவியின் சாதனை குமுழமுனை ம.வி க்கும், முல்லை வலயத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்திருக்கின்றது.
இவர் கல்வியில் மென்மேலும் சிறக்க பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்பதோடு இவருக்கு பயிற்றுவித்த  ச.சந்திரசேகரம் ,திருமதி.ந.பாலநாதன் ஆசிரியர்களையும் பாடசாலை சமூகம்
 வாழ்த்தி நிற்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - கட்டுரை வரைதல் போட்டியில் முல்லை மாணவி சாதனை.

பல்கலைக்கழகத்தின் முன்னுள்ள பிரதான வீதியில் விபத்து

திங்கள், 11 செப்டம்பர், 2017

சற்று முன் கொழும்பிலி௫ந்து கல்முனை நேக்கி வந்த வாகனம் சற்று முன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னுள்ள பிரதான வீதியில் விபத்து
இவ் விபத்தானது சாரதியின் நித்திரையின் நிமிர்த்தம் காரணமாக மின் கம்பத்துடன் மோதியுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பல்கலைக்கழகத்தின் முன்னுள்ள பிரதான வீதியில் விபத்து

நாட்டில் புதிய தேசிய அடையாள அட்டை! விண்ணப்பதாரர்களுக்கு

புதி­தாக தேசிய அடை­யாள அட்­டையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக விண்­ணப்­பிக்கும் போது ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தால் பதிவு செய்­யப்­பட்ட புகைப்­ப­டப்­பி­டிப்­பா­ள­ரி­ட­மி­ருந்து புகைப்­ப­டங்­களைப் பெறு­மாறு ஆட்­ப­திவு திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.
இம் மாதம் முதல் புதிய தேசிய அடை­யாள அட்­டைக்­காக, தேசிய சிவில் விமான ஒழுங்­க­மைப்பு தரத்­தி­லான புகைப்­படம் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும் என ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­களம்
 குறிப்­பிட்­டுள்­ளது.
அதற்­க­மைய, புதிய இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டைக்­கான உரிய புகைப்­படம் எடுத்தல் தொடர்­பாக தகை­மை­யு­டைய புகைப்­பட நிலை­யங்கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.
2017/09/01 ஆம் திக­தி­யி­லி­ருந்து தங்­களால் தேசிய அடை­யாள அட்­டையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக விண்­ணப்­பிக்கும் போது கீழ்க்­காணும் தரத்­தி­லான புகைப்­ப­டத்­தினை உப­யோ­கப்­ப­டுத்­தும்­படி 
கோரப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான புகைப்­ப­டத்­தினை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தால் பதிவு செய்­யப்­பட்ட புகைப்­ப­டப்­பி­டிப்­பா­ள­ரிடம் செல்­லும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது.
9,16 மற்றும் 17 என்னும் பிரி­வு­களின் நோக்­கங்­க­ளுக்­காகச் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்குத் தேவைப்­ப­டுத்­தப்­படும் அத்­த­கைய ஒவ்­வொரு நிழற்­ப­டமும் பின்­வரும் பரி­மா­ணங்­க­ளையும், அள­வுக்­கு­றிப்­பீ­டு­க­ளையும், நிய­மங்­க­ளையும் மற்றும் தரத்­தையும் கொண்­டி­ருத்தல் வேண்டும்.
நிழற்­பட அள­வா­னது, அக­லத்தில் 35 மி.மீ. உய­ரத்தில் 45 மி.மீ. என்­ப­தா­க­வி­ருத்தல் வேண்­டு­மென்­ப­துடன், நிழற்­ப­டத்தின் தர­மா­னது, ஆட்­களைப் பதிவு செய்தல் ஆணை­யாளர் தலை­மை­ய­தி­ப­தி­யினால் ஏற்­பாடு செய்­யப்­படும் மென்­பொ­ரு­ளுக்­கி­ணங்க அல்­லது அறி­வு­றுத்­தல்­க­ளுக்­கி­ணங்க
 இருத்தல் வேண்டும்.
முக­மா­னது, திறந்த மற்றும் தெளி­வாகத் தென்­ப­டக்­கூ­டிய கண்­க­ளு­டனும், மூடிய வாயு­டனும், சிரிப்­பில்­லா­மலும், சுய­நிலை முகக் குறிப்­புடன் இருத்தல் வேண்டும்.
தலை­மு­டி­யா­னது, முகத்­தி­லி­ருந்து வில­கி­யி­ருத்தல் வேண்­டு­மென்­ப­துடன், முகத்தின் விளிம்­புகள் தெளி­வாகத் தென்­ப­டக்­கூ­டி­ய­ன­வா­க
 வி­ருத்­தலும் வேண்டும்.
மூக்குக் கண்­ணா­டி­க­ளி­லி­ருந்து (ஏற்­பு­டை­ய­தாயின்) பிர­தி­ப­லிப்­புகள் எவையும் தென்­ப­டக்­கூ­டி­ய­ன­வா­க­வி­ருத்­த­லா­காது.
வில்­லை­க­ளி­னூ­டாகக் கண்கள் தெளி­வாகத் தென்­ப­டக்­கூ­டி­ய­ன­வாக இருத்தல் வேண்­டு­மென்­ப­துடன், தெளி­வான (நிறப்­பூச்­சி­டப்­ப­டாத) வில்­லைகள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றன.
வெளிச்­ச­மி­டுகை ஒரு சீரா­ன­தாக இருத்தல் வேண்­டு­மென்­ப­துடன், நிழல்­களை, கூசொ­ளியை அல்­லது பளிச்­சிட்டுப் பிர­தி­ப­லிப்­பு­களைக் காண்­பித்­த­லு­மா­காது.
நிழற்­ப­டத்தின் காட்­சிப்­ப­டுத்­தலும் வெண்­நிறப் பின்­பு­லமும் விண்­ணப்­ப­கா­ரரின் இயற்­கை­யான தோல் நிறத்தைப் பிர­தி­ப­லித்தல் வேண்டும்.
தோற்­ற­நிலை நேரா­க­வி­ருத்தல் வேண்­டு­மென்­ப­துடன், முகமும் தோள்­களும் நிழற்­படக் கரு­விக்கு நடு­விலும் எல்லாப் புறமும் சரி­ச­ம­மா­கவும் இருத்­தலும் வேண்டும். பின்­ன­ணி­யா­னது, ஒரு சீரா­கவும் அலங்­கா­ரங்­க­ளின்­றியும் வடிவங்களில்லாமலும் இளநீல நிறத்திலும் 
இருத்தல் வேண்டும்.
உருவமானது, தெளிவாகவும் கூர்மையாகவும் ஒரு நிலைப்படுத் தப்பட்டதாகவும் இருத்தல் வேண் டும்.
நிழற்படமானது, உயர்தொழில்சார் அச்சிடும் ஆய்வுகூடத்தைப் பயன்படுத்தி நிறத்தில் அச்சிடப்படுதல் வேண்டும். எவ்வகையிலும் மாற் றப்படுத்தலாகாதென்பதுடன், விண் ணப்பகாரரின் இயற்கை நிலையில் எடுக்கப்படுதலும் வேண்டும் எனவும் 
கேட்கப்பட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - நாட்டில் புதிய தேசிய அடையாள அட்டை! விண்ணப்பதாரர்களுக்கு

கண்ணகிபுரம் பகுதியில்கடைக்கு தீவைப்பு 2 வயதுக் குழந்தை பலி

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

கிளிநொச்சி- புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தீவிபத்தில் 2 வயது சிறுவன்
 உயிரிழந்தான்.  குழந்தையின் தந்தை படுகாயமடைந்த நிலையில்ல் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  மூவர் கொண்ட குழு வர்த்தக நிலையத்தின் மீது பெற்றோல் விசி தீவைத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பொலிஸாரிடம்
 முறையிட்டுள்ளனர்.
சம்பவம் பற்றி கடை உரிமையாளர் ரமேஸ்குமார் தெரிவிக்கையில், வர்த்தக நடவடிக்கைகள் முடிவடைந்து கடையை பூட்டிய நிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த சில இளைஞர்கள் பெற்றோல் கேட்டனர். உருட்டிச் செல்ல வேண்டுமே என எண்ணி மீண்டும்
 கடையை திறந்து அவர்களுக்கு உதவும் வகையில் பெற்றோலைக் கொடுப்பதற்கு முயன்றேன். கடையின் பின் பகுதியில் இவர்கள் நின்றனர். அப்பகுதியிலேயேதான் முதலில் தீ பிடித்தது. 
அவர்கள் ஏற்கனவே போத்தலில் மறைத்து வைத்திருந்த பெற்றோலை ஊற்றி வேண்டுமென்றே தீ வைத்திருக்க வேண்டும் என தனது சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கண்ணகிபுரம் பகுதியில்கடைக்கு தீவைப்பு 2 வயதுக் குழந்தை பலி

சூட்சுமமான முறையில் வவுனியாவில் 15 ஆடுகள் கொள்ளை

வியாழன், 7 செப்டம்பர், 2017

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் ஆட்டுப்பட்டி ஒன்றினை வைத்திருக்கும் ஒருவரிடம் இருந்து மிகவும் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம்(06) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆட்டுப் பட்டி ஒன்றினை வைத்திருக்கும் ஒருவரிடம் ஹயஸ்ரக வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், தான் படச் சூட்டிங் செய்ய 15 ஆடுகள் தேவை என்று 
கூறியுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சூட்சுமமான முறையில் வவுனியாவில் 15 ஆடுகள் கொள்ளை

கத்தி முனையில் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

நாவற்குளி – தச்சன்தோப்பு பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த ஆட்களை கத்தி முனையில் அச்சுறுத்திய திருடர்கள் ஒருதொகை தங்க நகைகள் மற்றும் பணத்தினைத் அபகரித்துச் சென்றுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் ஒரு லட்சம் ரூபா பணமுமே திருடப்பட்டுள்ளதாகத்
 தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் இன்று நீதிமன்றில் அறிக்கை
 தாக்கல் செய்தனர்.
கடந்த வாரம் நாவற்குளி தச்சன்தோப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த முதியவரையும் உதவிக்குத் தங்கியிருந்த இரு பெண்களையும் கத்திமுனையில் 
அச்சுறுத்தியுள்ளனர்.
இதன்போதே 82 பவுண் தங்கநகைகளும் பணமும் திருடப்பட்டதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கத்தி முனையில் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

சிகிச்சை பெற்றுவந்த நீரில் மூழ்கித்தப்பி யாழ்.மாணவி மரணம்

சனி, 2 செப்டம்பர், 2017

யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்பரப்பில், கடந்த 24ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் நீரில் மூழ்கிக் காப்பாற்றப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவியொருவர் 
உயிரிழந்தார்.  
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவியான சகாயதாசன் டயானா (வயது 23) என்பவரே இவ்வாறு 
உயிரிழந்தார்.   
இவர்,மண்பிட்டி நாவாந்துறையைச் சேர்ந்தவராவார்  நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்துக்கு சென்றபோதே இந்த விபத்து நடந்தது.   
ஒரு படகில் 6 பேர் பயணித்துள்ளனர். இதன்போதே, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று விசாரணைகளிலிருந்து
 தெரியவருந்துள்ளது.  
இதனையடுத்து, அங்கிருந்தவர்களால் ஐவர், உடனடியாக காப்பாற்றப்பட்டனர். ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.   
காப்பாற்றப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒன்றரை வயதுக் குழந்தையும் பெண்ணொருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவ்வாறு சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே இந்த மாணவி
 உயிரிழந்துள்ளார்.  
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - சிகிச்சை பெற்றுவந்த நீரில் மூழ்கித்தப்பி யாழ்.மாணவி மரணம்