இலங்கையிள் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வரட்சி நீடிப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வடக்கில் 130,243 குடும்பங்களைச் சேர்ந்த 440,531 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் 115,020 பேரும், யாழ்ப்பாணத்தில் 121,057 பேரும், கடும் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிலும் வரட்சியால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச செயலர் பிரிவில் 14,748 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்தவாரம், தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக
அதிகரித்துள்ளது.
94 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளனர். மேலும் ஆறு இலட்சம் பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக