ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லியப்பு பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவை லெட்சுமி தோட்டத்தை சேர்ந்த 25 வயதுடைய கணேசன் தயாளன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற ரயிலில் குறித்த இளைஞர் நேற்று மோதுண்டுள்ளார். சடலத்தை மீட்ட ரயில் அதிகாரிகள் ரொசல் ரயில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக