திருகோணமலையில் மூன்று பெண் குழந்தைகள் பாலியல் ரீதியில் வதைக்கப்பட்டனர். அதைச் செய்த குற்றச் சாட்டில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். இதனால் மூதூர் பெரிய வெளிப் பகுதியில்
நேற்றுப் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் கொந்தளித்தனர். பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிகப்படுபவர்களைப் பணிக்கமர்த்திய கட்டட ஒப்பந்தக்காரரை பிடித்து, கட்டி வைத்து உதைத்தனர். வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் தமிழ்ப் பாடசாலைகள் சிலவற்றின் மாணவர்களும் நேற்றைய தினம் போராட்டத்தில்
குதித்தனர்.
மூதூர், பெரியவெளி, மல்லிகைத்தீவில் இடம்பெற்ற வதைச் சம்பவம் குறித்துத் தெரிவிக்கப்படுவதாவது,
நேற்றுமுன்தினம் மல்லிகைத் தீவு பிரதேசத்தைச் சோ்ந்த 3 மாணவிகள் அறநெறிப் பாடசாலைக்குச் சென்றனர். அவர்களில் இருவருக்கு 7 வயது. ஒருவருக்கு 8 வயது. நேரம் தாழ்த்தியே மூவரும்
வீடு திரும்பினர்.
தாமதத்துக்கான காரணத்தைப் பெற்றோர் துருவினர். பாடசாலையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுத் திரும்பினோம் என்று குழந்தைகள் பதிலளித்தனர். அத்தோடு தம்மைச் சிலர் மலசலகூடத்தில் வைத்து பாலியல்ரீதியில் வதைத்தனர் என்றும் கூறி அழுதனர்.
உடனடியாகவே தொலைபேசியூடாக மூதூா் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலை கேட்டறிந்த உடன் அந்தப் பகுதிக்குச் சென்ற பொலிஸாா் மல்லிகைத் தீவு பாடசாலைக் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனா்.
கட்டட கட்டுமானத்தைப் பொறுப்பெடுத்திருந்த ஒப்பந்தகாரரை அந்தப் பகுதி மக்கள் பிடித்து கட்டிவைத்திருந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் தோன்றியது. அங்கு விரைந்த பொலிஸார் அவரை விடுவித்ததுடன் அவரின் உதவியுடன் மேலும் இருவரைக் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்டவர்கள் மூதூர் அல்லைநகர் மற்றும் செல்வநகர் பகுதிகளைச் சேர்ந்த 18, 30, 36, 40 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனா். சந்தேகநபா்கள் நேற்று மூதூா் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டாா். மாணவிகள் மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்காகச்
சேர்க்கப்பட்டனர்.
சம்பவத்தை அடுத்து நேற்றுக் காலை 8 மணிக்கே கிளிவெட்டிப் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைக்கு முன்பாக நீதியை நிலைநாட்ட வலியுறுத்திப் போர◌ாட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் பொதுமக்களும் இணைந்துகொண்டனர். இதனால் அந்த இடத்தில் பதற்றம் தெ◌ாற்றியது. பின்னர் அவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத்
தொடங்கினர்.
மதியம் 12.15 மணியளவில் கிழக்கு மாகாண கல்வியமைச்சா் எஸ்.தண்டாயுதபாணி சம்பவ இடத்துக்கு வந்தார். பொலிஸாா் இது தொடா்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீா்வு கிடைக்கும், தற்போது ஆா்பாட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதன்பின் ஆா்ப்பாட்டம்
கைவிடப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்க் குழந்தைகள் என்றும் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் முஸ்லிம்கள் என்றும் கூறப்படுவதால் அந்தப் பகுதியில் சமூகப் பதற்றங்களோ வன்முறைகளோ ஏற்படாத வகையில் பாதுகாப்பு இறுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார்
தெரிவித்தனர்.
மூதூ சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றம் இழைத்தவர்களை நீதமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெற இடமளிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக