யாழ் நாவற்குழி கிராமம் பெயர் மாற்ரம்செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு!

செவ்வாய், 30 மே, 2017

யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி கிராமத்தின் பெயரை சாந்திபுரம் என்று மாற்றுவதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் அதிகமாக செறிந்த வாழ்ந்த இடங்களில் நாவற்குழி 
கிராமமும் ஒன்றாகும்.
இக்கிராமத்திற்கு அருகில் ஒரு பௌத்த விகாரையும் உள்ளது.
பௌத்த விகாரை மற்றும் நாவற்குழியின் பாதுகாப்புக்காக அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து அகன்று செல்லுமாறு தற்போது அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளின் ஒரு அங்கமாக நாவற்குழி கிராமத்தின் பெயரை சாந்திபுரம் என்று மாற்றுவதற்கும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதற்கு இப்பிரதேச பௌத்த பிக்கு ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனினும் நாவற்குழி பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக செய்தியில் தொடர்ந்தும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக