வவுனியாவில் இன்று மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினிசூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிசார் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
வவுனியா நகரில் இன்று மதியம் முதல் 3 மணிநேரம் மழையுடன் கூடிய மினிசூறாவளி வீசியது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல்வேறு கட்டங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
இத்துடன் மன்னார் வீதி குருமன்காட்டு சந்தியில் வீதியோரத்திலிருந்த மரமோன்று முறிந்து வீழ்ந்ததில் மன்னார் – வவுனியா வீதிக்கான போக்குவரத்தும் சிறிது நேரம் தடைப்பட்டது.
வவுனியா மாவடட செயலக வளாகத்துக்குள்ளும் செல்லும் வழியில் வீதியோரத்திலிருந்த மரமோன்று முறிந்து வீழ்ந்ததில் சிறிது நேரம் மாவடட செயலக வளாகத்துக்குள்ளும் செல்லும் தடைப்பட்டது.
சுமார் ஒருமணிநேர போராட்டத்தின் மத்தியில் எல்லா மரம் வெட்டி அகற்றப்பட்டது
மற்றும் வவுனியா இலுப்பையடிசந்தியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பாதையில் மரமொன்று கார் மீது வீழ்ந்ததில் கார் பகுதியளவில் சேதமடைந்ததுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை
இவ் கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வவுனியாவில் பல்வேறு இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளது
இது தவிர, வவுனியா மாவட்ட செயலகம், வைத்தியசாலை மற்றும் நகரின் பல பகுதிகளிலும் உள்ள மரங்கள், விளம்பரபலகைகள் முறிந்து விழுந்தமையால் வீடுகள், கட்டிடங்கள், வீட்டு மதில்கள் என்பனவும் சிறு சேதங்குளக்கு உள்ளாகியுள்ளன. வவுனியா நகரப்பகுதியின் பரவலாக மின்சாரத்தடையும் ஏற்பட்டுள்ளது
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக