உலகம் முழுவதும் இந்த லீப் வருடம் உருவானதற்குப் பின்னால் இருக்கும் வரலாறு

வியாழன், 29 பிப்ரவரி, 2024

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி 29 ஏன் வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது தவறா அல்லது இதற்குப் பின்னால் ஏதாவது அறிவியல் இருக்கிறதா?
பூமி 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகளில் ஒரு சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது. அதாவது பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் 365 1/4. இதில் 365 நாட்களை நாம் ஓராண்டாக எடுத்துக் கொள்கிறோம்.
மீதம் இருக்கும் 1/4 நாட்களை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த நாளை 28 நாட்கள் மட்டுமே இருக்கும் பிப்ரவரி மாதத்தில் சேர்த்து ஆண்டுக்கு 366 நாட்கள் எனக்
 கணக்கிடப்படுகிறது.
இதுதான் லீப் ஆண்டு என்று சொல்லப்படுகிறது. ஆகையால் இந்த கணக்குப்படி ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒரு லீப் வருடம் வரும், அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் இருக்கும்.
கடைசியாக 2020 லீப் வருடமாக இருந்தது. அதன் பிறகு இந்த ஆண்டு அதாவது 2024 லீப் வருடமாக இருக்கிறது.லீப் டே இல்லை என்றால் என்ன ஆகும்? ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் லீப் நாள் சேர்க்கப்படாவிட்டால், பல சிக்கல்கள் ஏற்படலாம்.
லீப் நாள் முக்கியமானது, ஏனெனில் இது சூரிய வருடத்துடன் கலண்டர்.நாசாவின் கூற்றுப்படி, ஒரு வருடத்தில்5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகள் என்பது பெரிய விஷயமல்ல
.ஆனால் பல ஆண்டுகளாக அதைப் புறக்கணிப்பது பெரிய சிக்கல்களை உருவாக்கும். இதன் காரணமாக, வானிலை அமைப்பு
 கூட மாறக்கூடும்.
உதாரணமாக, கோடைக்காலமான ஜூலை மாதம், லீப் ஆண்டு இல்லை என்றால் சில நூறு ஆண்டுகளில் ஜூலை குளிர்கால மாதமாக
 மாறிவிடும்.நாம் பயன்படுத்தும் காலண்டர் ரோமன் நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது.
பண்டிகைகள் மற்றும் வானிலை காரணமாக, ரோமானியர்கள் நாட்காட்டியில் பல முறை மாற்றங்களைச் செய்தானர். முதல் காலெண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன.
பின்னர் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. முதலில் மார்ச் முதல் டிசம்பர் வரை மட்டுமே மாதங்கள் இருந்தன.
பின்னரே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்டன.
கிரிகோரியன் நாட்காட்டி
ஆங்கில மொழி சர்வதேச மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதால், கிரிகோரியன் நாட்காட்டி உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டர் ஆனது.
ஹிஜ்ரி நாட்காட்டி 
இந்த நாட்காட்டி இஸ்லாமிய நாடுகளின் புவியியல் இருப்பிடத்தை மனதில் கொண்டு இஸ்லாமிய மத நிபுணர்களால் உருவாக்கப்பட்டது.இது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி.
பௌத்த நாட்காட்டி
இதுவும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்காட்டி மற்றும் பௌத்தத்தில் வல்லுனர்களால் தயாரிக்கப்பட்டது.யூத நாட்காட்டி
இது சந்திரன் மற்றும் சூரியன் இருவரின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி.
சீன நாட்காட்டி
இதுவும் சந்திரன் மற்றும் சூரியன் இருவரின் இயக்கங்களின் அடிப்படையிலான காலண்டர் ஆகும்.
பஞ்சாங்கம் 
பஞ்சாங்கம் இந்தியாவில் மட்டுமின்றி நேபாளம், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இவை அனைத்தும் புவியியல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
இவற்றைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் “பஞ்சாங்கம்” என்பதால் பஞ்சாங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.இது தவிர, உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட காலண்டர்கள் புழக்கத்தில் உள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக