யாழ் தெல்லிப்பளை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், ஆளில்லா விமானத்துடன் தெல்லிப்பளை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக