கச்சத்தீவு திருவிழாவிழாவில் இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மதிய, மாநில அரசுகள்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை நீதிமன்றத்தின் செயற்பாட்டை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி தங்களுடைய படகுகளில் கருப்புக்கொடி கட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் இலங்கை - இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவை பக்தர்கள் புறக்கணித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வருகை தந்துள்ள பக்தர்கள் திரும்பிச் செல் நேரிட்டதோடு, பணம் மற்றும் பொருட்கள் வீண் விரயமாகியுள்ளதாக கவலைத்
தெரிவித்துள்ளனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை ஏற்படுத்திருக்கலாம் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக