வருடாந்த இடமாற்றத்திற்கு வடமாகாணத்தில் விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவித்தல்

வியாழன், 15 பிப்ரவரி, 2024

வடக்கு மாகாணத்தில் வலயங்களுக்கு இடையிலான வருடாந்த (2023) இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்கள் 19.02.2024( திங்கள்) புதிய பாடசாலைகளில் கடமையேற்க முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதே போன்று வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம், வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி கல்வி வலயங்களில் இருந்து பதிலீடாக 
சேவையின் தேவை கருதிய எனும் பதத்துடன் 
இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மேன்முறையீட்டிற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ( இப்பட்டியல் வலயங்களூடாக மாகாணக் கல்வித் திணைக்களம் தயாரித்தது) 
மேன்முறையீட்டின் பதில் வரும்வரை கடமையாற்றிய பாடசாலைகளில் சேவையாற்ற முடியும் என மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஏதேனும் இடர்ப்பாடுகள் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிதிச் செயலாளரும்,
 வடக்கு மாகாண இடமாற்ற சபை உறுப்பினருமான
   கி. இந்திரனுடனும் (0779543956), இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் 
சிரேஸ்ட துணைப் பொதுச் செயலாளர்  ஜெ. நிஷாகருடனும்( 0777291665) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டள்ளது. 
 என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக