நாட்டில் உயிருக்கு போராடும் மனைவி! வெளிநாட்டில் தவிக்கும் கணவன்

சனி, 12 ஆகஸ்ட், 2017

வெளிநாடொன்றில் சிக்கியுள்ள இலங்கையர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ள இலங்கை தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.
55 வயதான ஷாந்த ராஜபக்ச என்ற கப்பல் மாலுமியே இவ்வாறு சிக்கியுள்ளதாக அரபு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ராஜபக்ஷ குடும்பத்தை பார்க்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அவர் பணியாற்றும் கப்பல் கடந்த ஒரு வருடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ளது. அவருக்கு சம்பளமும் இதுவரை
 செலுத்தப்படவில்லை.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தனது தந்தை இறந்த போதிலும், அவர் இலங்கைக்கு செல்லவில்லை. தற்போது அவரது மனைவி மாரடைப்பினால் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.வி ஷார்ஜா மூன் என்ற கப்பலில் ராஜபக்ஷ பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குறித்த கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடலில் சிக்கியுள்ளது. இந்நிலையில் அங்கிருந்து நாடு திருப்ப வேண்டும் என ராஜபக்ஷ சண்டையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது இந்திய நண்பர்கள் ஆறு பேர்,
 அவருடன் அந்த கப்பலில் ஒரு வருடத்தை செலவழித்துள்ள நிலையில் கடந்த மாதம் அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எனினும் 55 வயதான ராஜபக்ச இன்னமும் நாடு திரும்ப முடியாமல்
 காத்திருக்கின்றார்.
2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் இந்த கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக அரபு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மாலுமிகளுக்கு எந்த சம்பளமும் வழங்கப்படாத நிலையில் உணவு, நீர் மற்றும் எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக