பதின் மூன்று இளைஞர்கள் வடமராட்சியில் அதிரடிக்கைது!!

புதன், 2 ஆகஸ்ட், 2017

யாழ்- வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 13 இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் வண்டி மீது கற்களால் தாக்குதல் நடத்தியமை, நெல்லியடியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை, பருத்தித்துறை வீதியில் ரயர்களை கொழுத்தி வன்முறையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டிலே குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்
குறித்த இளைஞர்களில் இருவர் நெல்லியடியில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் 11 இளைஞர்கள் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் வீதியின் 6 ஆம் கட்டைப் பகுதியில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி மாலை 4 மணியளவில் மணல் ஏற்றி சென்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
குறித்த இளைஞர் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற நிலையில் பொலிஸார் இடை மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார்
 தெரிவித்தனர்.
இதன்போது துன்னாலையைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரினால் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மந்திகை வைத்தியசாலையில்
 வைத்து பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் மீது மக்கள் கற்களால் தாக்குதல் நடத்திய நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக