கைதடியில் முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு கெஞ்சிய வயோதிபர்

வெள்ளி, 21 டிசம்பர், 2018

உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர், தன்னையும் முதியோர் இல்லத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கைதடி முதியோர் இல்லத்தின் வெளிவாயிலில் நின்று வீறிட்டு அழுது குழறிய நெஞ்சைப் பிசையும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அவரது துயரநிலையை கவனத்தில் கொண்ட இல்ல நிர்வாகம், உடனடியாக அவரை இல்லத்தில் சேர்த்துக் கொண்டது.
வட்டுக்கோட்டையை சேர்ந்த சபாபதிப்பிள்ளை இராஜகோபால் (85) என்பவரே இல்லத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முதியவராவார்.
கடந்த ஏழு வருடமாக கொழும்பில் 
உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தேன் என்றும், தறபோது உறவினர்கள் யாருமின்றி வாழ்வதற்கு சிரமப்படுவதாகவும் அவர் தெரிவித்தார் என்றும் கைதடி முதியோர் இல்ல நிர்வாகம் 
தெரிவித்துள்ளது.
உடல்நலம் குன்றிய நிலையில், அடுத்து என்ன செய்வதென தெரியாத நிலையில், முதியோர் இல்லா வாயிலுக்கு வந்து தன்னை இணைத்துக்கொள்ளும்படி கோரியிருக்கிறார். முதியோர் இல்லத்தில் இணைப்பதற்கான நிர்வாக நடைமுறையை 
குறிப்பிட்டபோது, தனது உடல்நிலையை குறிப்பிட்டு வீறிட்டு அழுதுள்ளார். இதையடுத்து அவரை இல்லத்தில் இணைத்துக்கொள்ள நிர்வாகம் உடனடி நடவடிக்கையெடுத்தது.
அவர் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள வசதியாக அவரது உறவினர்கள் இல்லத்துடன் தொடர்புகொள்ளுமாறு இல்லத்தின் அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கைதடியில் முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு கெஞ்சிய வயோதிபர்

மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி நாவற்குழியில் கொள்ளை

நாவற்குழி பகுதியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் சங்கிலி , தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வருகின்றார். அவரின் வீட்டு கூரையை பிரித்து நேற்று அதிகாலை உட்புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று மூதாட்டியை தாக்கி
 , அவரின் முகத்தை துணியால் கட்டி அவரை அங்கிருந்த கதிரை ஒன்றில் கட்டி வைத்து விட்டு அவர் அணிந்திருந்த சங்கிலி , தோடு என்பவற்றை அபகரித்ததுடன் , வீட்டினுள் தேடுதல் நடத்தில் வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 3 கையடக்க தொலைபேசி  என்பவற்றையும் கொள்ளையிட்டு தப்பி சென்று உள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பி சென்ற பின்னர் மூதாட்டியின் அவல குரல் கேட்டு அயலவர்கள் சென்று மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சண்முகநாதன் நித்தியலட்சுமி (வயது 
70) என்பவரே காயமடைந்தார். அதேவேளை தனக்கு 17 வயதிருக்கும் போது தந்தை தோடுகளை வாங்கி தந்ததாகவும் , தாய் சங்கிலியை வாங்கி தந்ததாகவும் , அவற்றையே இதுவரை காலம் அணிந்து இருந்த போது அவற்றை கொள்ளையர்கள் அபகரித்து சென்று விட்டனர் என கண்ணீர் மல்க சாவகச்சேரி பொலிஸரிடம் முறையிட்டு உள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசரணைகளை 
முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி நாவற்குழியில் கொள்ளை

புகையிரதத்துடன் லான்ட்மாஸ்ரர் யாழில் விபத்து

புதன், 19 டிசம்பர், 2018

கொழும்பில் இருந்து காங்கேசன் துறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத்துடன் யாழில் லான்ட்மாஸ்ரர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு 
அருகில் உள்ள புகையிரத கடவையை கடக்க
 முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது.அதன் போது லான்ட்மாஸ்ரர் சாரதி மயிரிழையில்
 உயிர் தப்பியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - புகையிரதத்துடன் லான்ட்மாஸ்ரர் யாழில் விபத்து

உடுவிலிலில் மூதாட்டி குருதி வெள்ளத்தில்

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளது.
இந்த நிலையில் . படுகாயமடைந்து குருதி வெள்ளத்திலிருந்த மூதாட்டியை  மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.
 இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் உடுவிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எம் பொன்மலர் (வயது-72) என்ற மூதாட்டியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 படுகாயமடைந்த மூதாட்டியை அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான119 இற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்யுலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.
 பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
வீட்டிலே  வளர்ப்பு நாய் நின்றுள்ளது. அது குரைத்த சத்தம் கேட்கவில்லை. இரண்டு கைகளும் கொடூரமாக அடித்து 
உடைக்கப்பட்டுள்ளன.
 தலைப்பகுதி,மற்றும் முகம் முழுவதும் அடிகாயங்கள் காணப்படுகின்றன. கொள்ளையிடும் நோக்கத்தோடு இச்சம்பவம் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளின் கணவர் ( தாதிய உத்தியோகத்தர் - தெல்லிப்பளை வைத்தியசாலை) 
தெரிவித்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - உடுவிலிலில் மூதாட்டி குருதி வெள்ளத்தில்

கொடிகாமத்தில் ரயிலுடன் மோதி நொருங்கிய வாகனம்

யாழில் சற்று முன் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட Mahendira ரக வாகனத்தை யாழ் தேவி புகையிரதம் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

Mahendira வாகனத்தின் பின்பகுதியில் மோதி அதனை வீதிக்கு வெளியே தள்ளியுள்ளது புகையிரதம். இதனால் மயிரிழையில் 
உயிர் தப்பியுள்ளார் சாரதி.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - கொடிகாமத்தில் ரயிலுடன் மோதி நொருங்கிய வாகனம்

எச்.ஐ.வி விழிப்புனர்வு யாழ் மாவட்டத்தில்

சனி, 1 டிசம்பர், 2018

சர்வதேச எச்.ஐ.வி தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் செயற்றிட்டம் ஒன்று யாழ் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ் சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த எச்.ஐ.வி விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம் யாழ் நகரை மையப்படுத்தி இடம்பெற்றது.
யாழ் கடற்கரை வீதியில் அமைந்துள்ள
 சிறைச்சாலை
 வளாகத்திலிருந்து ஆரம்பமான எச்.ஐ.வி விழிப்புனர்வு நடைபவனி பண்ணை வீதி, வைத்தியசாலை வீதியூடாக சென்று யாழ் பிரதான தபால் அலுவலகத்தில் நிறைவடைந்து அங்கு விழிப்புனர்வு செயற்பாடுகள் 
இடம்பெற்றன.
எச்.ஐ.வி குறித்து பொது மக்களை அறிவுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு யாழ் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் தலைமையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் என பலர் இதில் 
கலந்துகொண்டனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - எச்.ஐ.வி விழிப்புனர்வு யாழ் மாவட்டத்தில்

நாட்டில் சா/ தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

எதிர்வரும் திங்கட்கிழமை(03) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை  எதிர்வரும் 12 ஆம் திகதி 
நிறைவடையவுள்ளது. 
இந் நிலையில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடவடிக்கைகளுக்காக 47 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 4,561 பரீட்சை நிலையங்களும், 541 பரீட்சை இணைப்பு நிலையங்களும் நாடு தழுவிய ரீதியில் 
அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இரத்மலானை விசேட தேவையுடையோர் வித்தியாலயம் மற்றும் தங்கல்ல மாத்தறை சிலாபம் கொழும்பு மகசீன் சிறைச்சாலை போன்றவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் 
அமைக்கப்பட்டுள்ளன. 
போராதனை போதனா வைத்திசாலை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றவற்றிலும் பரீட்சை நடைபெறவுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>



READ MORE - நாட்டில் சா/ தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி