நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு

வெள்ளி, 29 நவம்பர், 2024

நாட்டில் எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
 தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரீ.பி. சரத் இதனை தெரிவித்துள்ளார். வீடுகள் இல்லாத காரணத்தினால் திருமணம் செய்வது காலம் தாழ்த்தப்படுவதாகவும், அவ்வாறான
 ஓர் நிலைமை 
இனி நீடிப்பதற்கு இமளிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 24 முதல் 30 வயதுக்குள் திருமண பந்தத்தில் இணைந்து 
கொள்ள வேண்டும் எனவும் அதுவே சரியான வயது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 இந்த வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோருக்கு வீடு ஒன்றை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் நிலையை எட்டும் வரையில் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக