நாட்டில் பெரும்போகத்துக்கான உர மானியத்தின் முதற்கட்டம் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி, 678.06 மில்லியன் ரூபாய் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் உர மானியத்தை விட இம்முறை சற்று அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த உர மானிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 15, 000 ரூபாயும், 2ம் கட்டமாக 10, 000 ரூபாவும் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தமாக 25, 000 ரூபாய் வழங்கப்படும் என கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக