நாட்டில் சுமார் பதினெட்டு இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பஹ்ரேனில் இருந்து இலங்கைக்கு வந்த குறித்த நபர் 04.08.2024 இன்று.காலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது பயணப் பையில் இருந்து 12,000 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் அடங்கிய 60 அட்டைப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவராவார். என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக