நாட்டில் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே
அவர் தெரிவித்தார்.
அத்துடன் அடுத்த வருடம் முதல் வழமை போன்று சாரதி அனுமதி அட்டைகளை வழங்க முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார் குறிப்பிடத்தக்கது என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக