நாட்டில் பல நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் திருமதி ஜி.எஸ். சகுரா தில்தாரா தெரிவிக்கிறார்.
அதனடிப்படையில் புலத்சிங்ஹல, மதுராவல,பாலிந்தநுவர
மற்றும் மில்லனிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்வான
பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக
இருக்குமாறும் இந்த பிரதேசங்களில் இடிந்து விழுந்திருக்கும் வீதிகளை பயன்படுத்தும் மக்கள் இந்த நிலவரம் தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும் அவர் மேலும் கூறினார்.
கடந்த சில மணித்தியாலங்களில் கணிசமான அளவு மழை பெய்து வருவதால் குக்குலேகங்கை நீர் தேக்கத்தின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 60 கன மீற்றராக அதிகரித்துள்ளதுடன் குடா கங்கைகளின் தாழ்வான
பகுதிகளில் நீரின் மட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதோடு களுகங்கை, மகுரு கங்கை மற்றும் குடாகைகளின் தாழ்வான
பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அதிக அவதானமாக செயல்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் அத்தனகலு ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளான ஜாஎல வத்தளை போன்ற பிரதேசங்கள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களில் இப்பிரதேசங்களில் கணிசமான மழை வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிலை வெள்ள அபாயமாக அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
விசேடமாக களுகங்கையின் குடாகங்கை மற்றும் மகர கங்கையைச் சூழ தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் அதே
போன்று ஜாஎலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அப்பகுதிகளின் தாழ்வான பகுதிகளில் காணப்படும் இடிந்து விழுந்திருக்கும் வீதிகளை
பயன்படுத்தும் போதும் மிக அவதானமாக செயல்படுமாறு அவர் கேட்டுக் கொள்கின்றார் குறிப்பிடத்தக்கது என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக