நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் கணிசமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்நிலைமை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ். பி. சி.சுகீஸ்வர குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இதுவரை பெய்த மழையின் அடிப்படையில் கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு
ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆற்றுப் படுகை மிகவும் ஈரமாகிவிட்டதால், அத்தனகலு ஓயா மற்றும் ஊறுவல் ஓயா ஓடைகளில் இன்று கணிசமான மழை பெய்தால்,
அபாயம் உள்ளது.
ஆற்றுப் படுகை மிக எளிதில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டம் மில்லகந்த பிரதேசத்தில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பிரதேசங்களில் களு கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக திரு.சுகீஸ்வர குறிப்பிட்டார்.
அத்துடன், பத்தேகம பிரதேசத்தில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு ஜிங் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக