நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகள் கோதுமை மா தட்டுப்பாடால் மூடப்படும் அபாயம்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் இரத்தினபுரி, கஹவத்தை, கொடகவெல, பல்லேபெத்த மற்றும் இறக்குவானை போன்ற பகுதிகளில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மா போன்ற பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பண்டங்களின் தரம் குறைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 
இந்நிலையில், நாட்டில் நடமாடும் பேக்கரி தயாரிப்பு விற்பனையாளர்களும் வேலையின்மை அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன்,நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் 
தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக 
கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் 
சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவில் அமுல்படுத்தி மாவின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக