யாழில் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் வெளிமாவட்டக்காரர்

சனி, 25 ஏப்ரல், 2020

யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், விண்ணப்பித்தவர்களில் 2000 பேர் தமது சொந்த இடங்களுக்கு 
அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது;யாழ்ப்பாணத்தில் கடந்த 20 திகதி தொடக்கம் இன்றைய நாள் வரை பிற மாவட்டத்தைச் சேர்ந்த
 5000 பேர் அந்தந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் சுமார் 2000 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியமாக செல்ல வேண்டியவர்களே 
அனுப்பப்பட்டுள்ளனர்.அடுத்த கட்டமாக சிலர் அனுப்பப்படவுள்ளனர். மேலும் ,அதி இடர் வலயமாக கருதப்படும் மாவட்டங்களுக்கு செல்வதற்காக விண்ணப்பிப்பவர்கள் தற்போதய நிலையில் அனுப்பப்பட மாட்டார்கள் என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக