நாட்டில் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

சனி, 9 டிசம்பர், 2023

நாட்டில்  பண்டிகை காலம் காரணமாக முட்டையின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.
கடந்த நாட்களில் 45 ரூபாய்க்கு உட்பட்ட விலையில் விற்பனையான வெள்ளை முட்டை தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சிவப்பு முட்டை 53 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்தநிலையில், வெள்ளை முட்டையொன்றை 50 ரூபாய்க்கும், சிவப்பு முட்டையொன்றை 52 ரூபாய்க்கும் விற்பனை 
செய்யுமாறு முட்டை விற்பனையாளர்களுக்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று முன்தினம் 
கோரியிருந்தது.
நத்தார் மற்றும் புதுவருடப்பிறப்பு காரணமாக தற்போது, சந்தையில் முட்டைக்கு அதிக கேள்வி நிலவுகிறது. இந்தநிலையில், சந்தையில் கேக் உள்ளிட்ட முட்டை சார்ந்த உற்பத்திகளின் விலையும் 
அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், முட்டை விலை அதிகரித்த நிலையில், காணப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது.
எவ்வாறாயினும், பண்டிகை காலத்தில் முட்டையின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க முன்னதாக தெரிவித்திருந்தமை
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

சர்வதேச சதுரங்க போட்டி இன்று காலை யாழில் ஆரம்பமானது

வெள்ளி, 8 டிசம்பர், 2023

யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்படும், ‘யாழ் சர்வதேச சதுரங்க போட்டி 2023‘ இன்று காலை 
ஆரம்பமானது. 
குறித்த போட்டியானது எதிர்வரும் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலாஸில் நடைபெறும் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், 
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறிசற்குணராஜா, இந்திய துணைத்தூதராக அதிகாரி ஸ்ரீ ராம் மகேஷ், இலங்கை 
சதுரங்க கழகத்தின் தலைவர் லக்ஸ்மன் விஜேசூரிய, ஞானம் பவுண்டேசனின் உப தலைவர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள குறித்த போட்டியில் 150 இற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - சர்வதேச சதுரங்க போட்டி இன்று காலை யாழில் ஆரம்பமானது

பிலியந்தலையில் இரட்டைக் குழந்தைகள் விற்பனை -தாய் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றின் அறிவிப்பு

வியாழன், 7 டிசம்பர், 2023

 இலங்கை பிலியந்தலையில் இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைதான மூன்று பெண்களும் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த மூன்று பெண்களும் பொலஜஸாரால் கைது
 செய்யப்பட்டிருந்தனர்.
 பிறந்து 07 நாட்களேயான குழந்தைகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில், குறித்த குழந்தைகளின் தாயான பிலியந்தலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும்,
 குழந்தைகளை 
வாங்க வந்த பொலன்னறுவை மற்றும் ராகம பகுதிகளை சேர்ந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டிருந்தமை என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - பிலியந்தலையில் இரட்டைக் குழந்தைகள் விற்பனை -தாய் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றின் அறிவிப்பு

நாட்டில் மின் பாவனையாளர்களுக்கு அனுப்பப்படவுள்ள சிவப்பு கட்டணப் பட்டியல்

புதன், 6 டிசம்பர், 2023

நாட்டில் 50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சாரசபை விசேட அறிவிப்பு ஒன்றை 
வெளியிட்டுள்ளது.
இதற்கமைவாக உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை 
தெரிவித்துள்ளது.
50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணத்தை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் 
இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு ஒன்றை 
வெளியிட்டுள்ளது.
இதற்கமைவாக மின்சாரம் பயன்படுத்திய ஒரு மாதத்தின் பின்னரே மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் பெரும்பாலான நுகர்வோர்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்துகின்றார்கள் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக ஒரு மாதத்திற்கான கட்டணம் செலுத்த தவறியதன் பின்னர் சிவப்பு பட்டியல் வழங்கப்படும் என்றும், சிவப்பு பட்டியல் வழங்கப்பட்ட பின்னர் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் 
குறிப்பிட்டுள்ள 
மின்சார சபை அதன்பின்னரே மின்சாரம் துண்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
எனினும், 2023ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 5 இலட்சத்து 44 ஆயிரத்து 488 மின்வெட்டு மற்றும் மின் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சராசரியாக ஒரு வருடத்திற்கு சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்புகளைப் பெறுவதாகவும், இதனால் 2019 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் 5 இலட்சத்து 44 ஆயிரத்து 488 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை மேலும் குறிப்பிடுகிறது.
இலங்கை மின்சார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இ-பில் முறையின் படி சிவப்பு கட்டணங்கள் வழங்குவது படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிக விரைவில் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நிலுவைத் தொகை அறிவிக்கப்படும் எனவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மின் பாவனையாளர்களுக்கு அனுப்பப்படவுள்ள சிவப்பு கட்டணப் பட்டியல்

நாட்டில் அதிகரிக்கும் உணவு நெருக்கடியும் போஷாக்கின்மையும் கை கொடுக்குமா தற்சார்பு பொருளாளதாரம்

செவ்வாய், 5 டிசம்பர், 2023

இலங்கை தற்பொழுது முகம்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு எழுவதற்கு பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ள
 வேண்டியுள்ளது. 
இந்த நிலையில் தான் நாட்டில் உணவு இல்லாமல் அரைவாசிப்பேருக்கும் அதிகமானோர் அதாவது 55 சதவீதமானோர் மூன்று வேளை உணவுக்கே வழியில்லாமல் உள்ளனர்.
 சமகால அரசாங்கத்தின் திட்டமிடல் அற்ற செயற்பாடுகள் நாட்டின் அபிவிருத்தியை அதளப்பாதாளத்திற்கு கொண்டு செல்கின்றன. இதில் பாதிக்கப்படுவது என்னவோ நாட்டில் உள்ள அடித்தட்டு
 மக்கள் தான். 
இந்த நிலையில் நாட்டில் போஷாக்கு கேள்விக்குள்ளாகிய நிலையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 
மனிதனின் இருப்பு நிலைக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அடித்தளமே போஷாக்கான உணவுதான். அதற்கே நாட்டில் உள்ள அநேகமானோர் ஒருவேளை உணவினைப் பெற்றுக்கொள்வதற்கே ஜீவ மரண போராட்டத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
 நாட்டின் பொருளாதார நெருக்கடி வறுமையையும் அதனோடிணைந்த உணவுப்பற்றாகுறையையும் தீவிரப்படுத்தியுள்ளது. 
வறுமை நிலையின் காரணமாக சிறு பிள்ளைகள் மற்றும் கர்பிணித் தாய்மார்கள் மந்த போஷனைக்கு ஆளாகிவருவதோடு இது ஒரு ஆரோக்கியமான சமூக உருவாக்கத்திற்கும் பாதகமாக 
அமைகின்றது.
இது தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார கருத்து ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதாவது இன்றைய நிலவரப்படி 
இலங்கையில் 55% மக்களுக்கு மூன்று வேளை உணவு 
இல்லை என்றும் இருபத்தி ஒன்பது வருடங்களாக சுபிட்சம் வழங்கப்பட்டாலும், எழுச்சி இல்லை என்றும், தற்போதைய வேலையில்லாத் திட்டமும் 
இதற்கு காரணம். 
இத்தீர்மானத்தை நிறைவேற்றும் போது கிராம அதிகாரிகளிடம் கூட கருத்து கேட்கப்படவில்லை எனவும் அதனால் லட்சக்கணக்கான 
முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார். 
 மேல்முறையீடு செய்த அனைவரும் மிகவும் ஏழைகள், அப்பாவி மக்கள் என்றும் லட்சக்கணக்கான மக்கள் இன்று பட்டினியால் வாடுகின்றனர் என்றும் அவர் கூறினார். 
இவ்வாறுதான் இன்றைய அரசாங்கத்தின் நிலை உள்ளது. போஷாக்கான உணவு என்பது எல்லோருக்கும் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. 
பின்தங்கிய வறிய மக்கள் ஒருவேளை உணவு கனவாகவே 
உள்ளது. இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை கடுகளவாகவே உள்ளது. யானைப்பசிக்கு சோளப் பொரி போல
 அமைகின்றது. 
 இதனிடையே யுனிசெப் மற்றும் அமெரிக்கா போன்றன நாட்டில் உள்ள குழந்தைகளின் நலன் கருதி பாடசாலை மட்டங்களிலும் பின் 
தங்கிய கிராம மட்டங்களிலும் உணவு வழங்கினாலும் அது 
பற்றாகுறையாகவே உள்ளது.
 நாட்டின் பொருளாதார நெருக்கடி வேலையில்லாப் பிரச்சனை போன்ற நிலைமைகள் உணவுத் தேவையை ஆதிக்கப்படுத்தி உள்ளன.
 நாட்டின் பொருளாதார நிலைமையுடன் ரஷ்ய உக்ரைன்
 போர் உள்ளிட்டன உணவு விநியோக தடைகளை ஏற்படுத்தியிருந்தன. அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடு நாட்டின் உணவு பஞ்சத்திற்கு தூபமிட்டன. 
 மலையக மக்கள் உழைப்பிற்கேற்ப ஊதியமின்றி அல்லல்படுகின்றனர். வடக்கு கிழக்கு மக்கள் விவசாய நடவடிக்கைகள் மற்றும் மீன்பிடித்தலுக்கு எரிபொருள் விலையேற்றத்தின் தாக்கத்தினால் அவதியுறுகின்றனர்.
 இதுஇவ்வாறு இருக்க எவ்வாறு நாட்டில் உணவு உற்பத்தியினை 
மேற்கொள்ள முடியும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அசுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
 நாளுக்கு நாள் உணவுகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுகின்றன. இதன்காரணமாக நாட்டில் மந்த போசனை அதிகரித்து 
வருகின்றது. இது தொடர்பில் உலக நாடுகள் கவனம் 
செலுத்தயுள்ளன. 
இதன் பாதகமான விளைவுகள் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கபப்டுகின்றது. இதற்கு தேசிய போஷாக்கு கொள்கை ஒன்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும். 
இதற்கு நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கடசிகளும் ஒன்றிணைந்து செயற்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் செயற்திட்டங்கள் நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். 
அப்படியாயின் அந்த செயற்திட்டம் வெற்றி அளிக்கும். இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மற்றும் ஏனைய உதவிகளில் இருந்து உணவு மற்றும் விவசாய
 நடவடிக்கைகளுக்கு அதிகளவான நிதி ஒதுக்கி எதிர்கால சமூகத்தினை போஷாக்குள்ள சமூகமாக மாற்றி அமைக்க வேண்டும்.
 அத்தோடு அரசாங்கம் மக்களிடையே தன்னிறைவுப் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு
 குடும்பமும் தமக்கு தேவையான உணவினை தாமே உற்பத்தி செய்து கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். 
ஒவ்வொரு கிராம மட்டங்களிலும் இருந்தும் அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். உலக நாடுகளே எதிர்வரும் காலங்களில் பெரும் உணவு நெருக்கடியை முகம் கொடுக்க வேண்டி வரும் என ஆய்வுகள்
கூறுகின்றன.
 இந்த நிலையில் சில நாடுகளில் தன்னிறைவுப் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான இயற்கை முறையிலான உணவினை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தியும்
 வருகின்றன.
 அதேபோல் இலங்கையிலும் தன்னிறைவுப் பொருளாதாரத்தினை ஊக்குவித்து அதற்கான ஊக்கத் தொகை மற்றும் இதர உதவிகளை அரசாங்கம் செய்ய வேண்டும். இல்லையேல் நாட்டில் வாக்களிப்பதற்கு மக்கள்
 இருக்க மாட்டார்கள். 
தமது அரசியல் இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவேனும் மக்கள் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
 எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தமக்கான 
ஆரோக்கியமான 
உணவினை உற்பத்தி செய்ய தவறும் பட்ஷத்தில் நாட்டில் உணவு நெருக்கடி நூற்றாண்டு கடந்தும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது திண்ணமே.
என ஆய்வுகள் கூறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
.
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் அதிகரிக்கும் உணவு நெருக்கடியும் போஷாக்கின்மையும் கை கொடுக்குமா தற்சார்பு பொருளாளதாரம்

நாட்டில் அரச பாடசாலைகளில் ஆயிரக்கணக்கில் ஆசிரியர் வெற்றிடங்கள்

திங்கள், 4 டிசம்பர், 2023

நாட்டில் நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச பாடசாலைகளில் பணிபுரியும் வேளையில் பரீட்சை நடத்தி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண கல்வி அமைச்சு எடுத்த தீர்மானங்களை எதிர்த்து 
மாகாண கல்வி அமைச்சுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 
இந்த மனுக்கள் மீதான விசாரணை.04-12-2023. இன்று  எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதனைத் 
தெரிவித்தார்.  
சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்  விராஜ் தயாரத்ன, பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் நீதித்துறைச் செயற்பாடுகளை தவறாகப் பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளினால் வெற்றிடங்களை நிரப்புவதில் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 
இதனால் அரச பாடசாலைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் அரச பாடசாலைகளில் ஆயிரக்கணக்கில் ஆசிரியர் வெற்றிடங்கள்

நாட்டில் மலை உச்சியில் சிக்கிய ராகம மருத்துவப் பீட மாணவர்களை மீட்ப்பு ஆரம்பித்துள்ளனர்

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் ஹந்தான மலை உச்சியில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக அப்பகுதிக்கு செல்வது மிகவும் சிரமம் என பொலிஸார் மேலும் 
தெரிவிக்கின்றனர்.
 எனினும் மாணவர்களை மீட்பதற்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது     

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>

READ MORE - நாட்டில் மலை உச்சியில் சிக்கிய ராகம மருத்துவப் பீட மாணவர்களை மீட்ப்பு ஆரம்பித்துள்ளனர்