பெண்னொருவர் யாழில் மின்சாரம் தாக்கி பலியானார்

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

யாழில் மின்சாரம் தாக்கி பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று யாழ். வைத்தியசாலை வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.இதில் 55 வயதுடைய 
பெண் ஒருவரே இவ்வாறு உரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்.



READ MORE - பெண்னொருவர் யாழில் மின்சாரம் தாக்கி பலியானார்

கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் திருட்டு

சனி, 27 அக்டோபர், 2018

யாழ் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் பித்தளை பாத்திரங்கள் திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் விஸ்வலிங்கம் கீர்த்தி ராசன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று (26-10-2018) வெள்ளிக்கிழமை மதியம் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர் இல்லாத சமயத்தில் ஜன்னல் கம்பிகளை களற்றி வீட்டினுள் உட்புகுந்து அறைகள் அனைத்திலும் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியதோடு அறையில் இருந்த பெறுமதிமிக்க பித்தளை பாத்திரங்களை திருடிச்சென்றுள்ளார்கள்.
குறித்த புதிய செம்மணி வீதியில் கடந்த இரண்டு மாதங்களில் பக்கத்து பக்கத்து வீடுகளில் தொடர்ச்சியாக மர்ம முறையில் பல திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளது. அனைத்து திருட்டு சம்பவங்களும் ஒரே தரப்பினரால் மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் 
சந்தேகிக்கின்றனர்.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் திருட்டு

யாழ் ஏழாலையில் திடீரென தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

யாழ் ஏழாலையில் சற்று முன்னர், முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றியெரிந்து நாசமாகியுள்ளது. இதில் பயணம் செய்தவர்கள் மயிரிழையில் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.யாழ் ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் சென்றுகொன்டிருந்த முச்சக்கர 
வண்டி ஒன்று திடீரென்று தீப்பிடித்து முற்றாக நாசமாகியுள்ளது. எனினும் முச்சக்கர வண்டி தீப்பிடித்ததற்கான காரணம்
 தெரியவில்லை.
வீதியில் சென்று கொண்டிருந்தவர்களும் அயலவர்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்ற போதும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் ஏழாலையில் திடீரென தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

வேரோடு சரிந்த 200 வருடங்கள் பழமையான மரம் யாழில்

யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை மற்றும் புயல் காற்று காரணமாக 200 வருடங்கள் பழமையான பாரிய மலை வேம்பு மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
நேற்று  கடும் காற்றுடன் கூடிய அடை மழை பெய்த நிலைமையில் மரம் இவ்வாறு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பழைய பூங்கா வீதியில் உள்ள வடமாகாண மின்சாரசபை காரியாலயம் முன்பாக நின்றிருந்த மரமே சரிந்து
 விழுந்துள்ளது.
தனால் யாழ். மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் ஊடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, யாழ். மாநகர சபையின் தீயணைப்பு 
பிரிவினரும், சுகாதார ஊழியர்களும் இணைந்து குறித்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


READ MORE - வேரோடு சரிந்த 200 வருடங்கள் பழமையான மரம் யாழில்

மன்னார் தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்

வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழர் தாயகத்தில் அதிசயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய மன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
20 வருடங்களுக்கு 300 மெகாவோட் கணக்கில் மின்சாரம் உற்பத்தி செய்ய கூடிய இயற்கை எரிவாயு வைப்பகம் ஒன்று மன்னாரில் 
கிடைத்துள்ளது.
இந்த வைப்பகம் 350 கன அடியை கொண்டுள்ளதாகவும், அதனை அபிவிருத்தி செய்வதற்காக திறந்த விலை மனு கோரல் ஒன்று எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு வைப்பங்களை ஆய்வு செய்யும் ஸ்லம்புஜா என்ற சர்வதேச நிறுவனத்தினால் மன்னார் கடல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் ZM 2Z என பெயரிடப்பட்ட பகுதியில் இந்த இயற்கை எரிவாயு வைப்பகம் உள்ளது.
மன்னார் கடல் பகுதியில் 1500 மீற்றர் ஆழ் கடலில் இருந்து மேலும் 2000 மீற்றர் தூர ஆழத்தில் இந்த வைப்பகம் 
அமைந்துள்ளது.
இந்த வைப்பகத்தை பெற்றுக் கொள்வதற்காக 750 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய வேண்டும். அதற்காக சர்வதேச சந்தையில் விலை மனு கோரப்படவுள்ளது" என அமைச்சர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - மன்னார் தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்

கம்பளை கஞ்சாவுடன் காட்டிலே கலாட்டா மாணவர்கள் கைது

கம்பளை மாணவர்கள் சிலர் காடு ஒன்றிற்கு சென்று மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்னர்.இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த 4 மாணவர்கள் மேலும் ஒரு 20 வயதான இளைஞனுடன் கம்பளை பிரதேசத்தில் கஞ்சா அருந்தி பாலியல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். அத்துடன் 
அதனை தங்கள் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.பாடசாலைச் சீருடையில் மாணவர்கள் சில காட்டிற்குள் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்வதாக கூறிவிட்டு காடு ஒன்றிற்கு சென்ற மாணவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்னர்.அவர்களின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது அவர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட காட்சி அதில் 
காணப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் இருந்து கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மாணவர்கள் இம்முறை பரீட்சை எழுது உள்ளமையினால் எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - கம்பளை கஞ்சாவுடன் காட்டிலே கலாட்டா மாணவர்கள் கைது

யாழில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

யாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் அதிகாரிகள், தமது முதலாவது வெளிநாட்டு அகழ்வாய்வு நடவடிக்கைகளை,  கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கையில் மேற்கொண்டிருந்தனர்.
துறைமுக நகரான யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 நாள்கள் விரிவான அகழ்வாய்வில், ஈடுபட்டனர்.
இதன்போது, அல்லைப்பிட்டி மற்றும் ஊர்காவற்றுறை கோட்டை சிதைவுப் பகுதிகளில், அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக, ஷங்காய் அருங்காட்சியக அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய  சென் ஜீ தெரிவித்தார்.
சென்னும் அவரது நண்பர்களும், அல்லைப்பிட்டிப் பகுதியில் 92.4 சதுர மீற்றர் பரப்பளவிலான இடத்தில் அகழ்வாய்வை மேற்கொண்ட போது, 650 வரையான மட்பாண்டத் துண்டுகளைக் கண்டெடுத்தனர். அவற்றில் 600 இற்கு மேற்பட்டவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை 
என்று சென் கூறினார்.
பெரும்பாலான சீன மட்பாண்ட துண்டுகள், 11 ஆம் நூற்றாண்டின் பின் அரைக்காலப் பகுதி அல்லது, 12 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலப்பகுதியைச் சேர்ந்தவையாகும் என்று ஷங்காய் அருங்காட்சியகத்தின், சீன மட்பாண்ட ஆய்வாளர் லூ மிங்ஹுவா தெரிவித்தார்.
கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகளில் கிண்ணங்கள், தட்டுகள், பானைகள் அடங்குகின்றன. இதுபோன்ற மட்பாண்டங்கள், தற்போதைய சீன மாகாணங்களான குவாங்டொங் மற்றும் பியூஜியானில் வெளிநாட்டு விற்பனைக்காக தயாரிக்கப்படுகின்றன.
பண்டைய பட்டுப்பாதை தொடர்பான ஆய்வுகளை ஷங்காய் அருங்காட்சியகம் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் யாங் ஷிகாங் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் சீனா தொடர்பான வரலாற்று ஆவணங்களி்ல், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகின்றன.
சீனாவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான ஷெங், இலங்கைக்கு பலமுறை வணிக மற்றும் நட்புறவுப் பயணங்களை மேற்கொண்டார் என்பதை வெளிப்படுத்தும், கல்வெட்டு ஒன்று 1911ஆம் ஆண்டு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பண்டைய கடல்சார் பட்டுப்பாதை வணிக வழி, பயண வலைப்பின்னல்கள், மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கலாசார தொடர்புகள்  குறித்த ஆய்வுகளில், இந்த தொல்பொருள் கண்டுபிடிப்பு முக்கியமான பங்கை வகிக்கும் என்று யாங் கூறினார்.
பண்டைய கடல்சார் பட்டுப் பாதையின் வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்வது, இலங்கையில் முக்கியமான சிதைவுகள் உள்ள பகுதிகளில் அகழ்வாய்வில் ஈடுபடுதல், கூட்டு கண்காட்சிகளை நடத்துதல், பணியாளர்களை பரிமாற்றம் செய்தல் தொடரபாக,  இலங்கை மத்திய கலாசார நிறுவகத்துடன்,  சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம், ஐந்து ஆண்டு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - யாழில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள்