தமிழ்நாட்டின் துாத்துக்குடியில் வியட்நாம் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் தொழிற்சாலை

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட்-தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு
 ஒப்பந்தம். 
இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. வின்ஃபாஸ்ட் ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தளத்தை தமிழ்நாட்டில் 
அமைக்க உள்ளது.
வின்ஃபாஸ்ட் ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை தூத்துக்குடியில் அமைய உள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தமிழ்நாட்டின் துாத்துக்குடியில் வியட்நாம் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் தொழிற்சாலை

நாட்டில் முருங்கைகாயின் விலை பச்சைமிளகாயை தாண்டுகிறது

சனி, 6 ஜனவரி, 2024

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண சந்தைகளின் நிலவரத்தின் படி, தற்போது முருங்கைக்காய் கிலோ மூவாயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம் 
தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, திருநெல்வேலிச் சந்தையில் நேற்றுமுன்தினம் முருங்கைக்காய்க்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது. முருங்கைக்காய் சீசன் தற்போது இன்மையாலும் மழையால் பாதிக்கப்பட்டதனாலும் அவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 அதேவேளை உருளைக் கிழங்கு வெங்காயம் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
அதிகரித்து வருகின்றமை.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் முருங்கைகாயின் விலை பச்சைமிளகாயை தாண்டுகிறது

நாட்டில் அரச பேருந்தில் தொலைபேசி என நினைத்து பற்று சீட்டு இயந்திரத்தை திருடிய பெண்

வெள்ளி, 5 ஜனவரி, 2024

நாட்டில் புதிய கையடக்கத் தொலைபேசி எனத் தவறாகக் கருதி லங்கம பேருந்தொன்றில் நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை விடுவிக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே 
உத்தரவிட்டார்.
இமதுவ ஹவ்பே பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இமதுவ ஹவ்பே பகுதியில் வசிக்கும் இந்தப் பெண், ஹவ்பேயில் அமைந்துள்ள வீட்டுக்குச் செல்வதற்காக அண்மையில் இமதுவவிலிருந்து பேருந்தில் ஏறியுள்ளார்.
அந்த பேருந்து அக்குரஸ்ஸ டிப்போவிற்கு சொந்தமான பேருந்தாகும். குறித்த வயோதிப பெண் பேருந்தில் ஏறியதும், கண்டக்டர் டிக்கெட் இயந்திரத்தை இருக்கையில் வைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க சாரதியின் 
இருக்கைக்குச் சென்றார்.
அப்போது பேருந்தில் சில பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர். பேருந்தில் ஏறியதும் அவர் அமர்ந்த இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் டிக்கெட் இயந்திரம் இருப்பதை பார்த்த வயோதிப பெண், நவீன கைப்பேசி என நினைத்து அதனை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
வீட்டிற்குச் சென்றதும் புதிய கைப்பேசியில் அழைப்புகளை மேற்கொள்ள எண்களை டயல் செய்தாள் ஒவ்வொரு முறையும் அந்த எண்களை டயல் செய்யும் போது அழைப்புகளுக்கு பதிலாக பேருந்து 
டிக்கெட்டுகள் வெளி வந்தன. 
இது கையடக்கத் தொலைபேசியல்ல, பயணச்சீட்டு இயந்திரம் என்பதை அறிந்து மறுநாள் காலி பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார். 
சம்பவத்தை அறிந்த அதிகாரி, அவரை தடுத்து நிறுத்தி, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சந்தேக நபரை இமதுவ பொலிஸ் சார்ஜன்ட் பிரேமசிறி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   


READ MORE - நாட்டில் அரச பேருந்தில் தொலைபேசி என நினைத்து பற்று சீட்டு இயந்திரத்தை திருடிய பெண்

கனடாவில் கடந்த ஆண்டு வாகன விற்பனைகள் அதிகரித்துள்ளதாம்

வியாழன், 4 ஜனவரி, 2024

கனடாவில் கடந்த 2023ம் ஆண்டு வாகன விற்பனையில் சாதக மாற்றம் பதிவாகியுள்ளது. ஓராண்டு கால இடைவெளியில் வாகன விற்பனை 11.8 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
 டெஸ்ரோசியர்ஸ் ஒட்டோமோடிவ் கன்சல்டன்ட்ஸ் என்னும் நிறுவனம் வாகன விற்பனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டின் பின்னர் நாட்டில் கடந்த 2023ல் கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கோவிட் காலத்தில் கனடாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் வாகன விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. குறிப்பாக 2023 டிசம்பர் மாதம் அனைத்து மாகாணங்களிலும் வாகன விற்பனை 
நல்ல பெறுமதியை பதிவு செய்துள்ளது. லைட் ட்ரக் ரக வாகனங்களின் விற்பனை 85.8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது   


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கனடாவில் கடந்த ஆண்டு வாகன விற்பனைகள் அதிகரித்துள்ளதாம்

நாட்டில் வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளாதவர்களிடம் இருந்து தண்டப்பணமாக அறவிட திட்டம்

புதன், 3 ஜனவரி, 2024

நாட்டில் வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும் அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 
தெரிவித்துள்ளார்.  
ருவன்வெல்ல பிரதேசத்தில்.03-01-2024. இன்று)காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை 
குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. 
இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி 
சிந்தித்து, மாநில வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அது நாட்டு மக்களை ஒடுக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.  
“வரிக் கோப்பைத் திறந்து எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல, தற்போது, ​​மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 



இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளாதவர்களிடம் இருந்து தண்டப்பணமாக அறவிட திட்டம்

நாட்டில் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

செவ்வாய், 2 ஜனவரி, 2024

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் 50,000 மெற்றிக் தொன் கீரி சம்பா இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகச் செயலாளர்  நிஹால்
 செனவிரத்ன தெரிவித்தார். 
இறக்குமதி செய்யப்பட்ட 01 கிலோகிராம் கீரி சம்பா 235 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
இதேவேளை, இன்று (02.01) அல்லது நாளை (03.01) கீரி சம்பா அரிசியின் ஒரு பகுதியை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக  வர்த்தக அமைச்சர் திரு.நளின் பெர்னாண்டோ
 தெரிவித்தார்.  
50000 கிலோகிராம் கீரி சம்பா கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

நாட்டில் பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

திங்கள், 1 ஜனவரி, 2024

நாட்டில் டீசல் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது இவ்வருடம் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சஷி வெல்கம அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வட் வரி அதிகரிப்பு காரணமாக நாட்டின் அனைத்து விதமான பொருட்களுக்குமான விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு