யாழ் குப்பிளானில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

புதன், 13 ஜூன், 2018

யாழ். குப்பிளான் வடக்கில் இடம்பெற்ற கோரவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி ஐந்து நாட்களின்  திங்கட்கிழமை(11.06.2018) பிற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் இந்த மாதம்-05 ஆம் திகதி பிற்பகல் வேளையில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த வேளையில் மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வர்த்தக நிலையமொன்றின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் தலையில் கடும் படுகாயமடைந்த குறித்த இளைஞன் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். மறுநாளே அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பத் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுப் பிற்பகல்(11) உயிரிழந்துள்ளார்.
யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியைச் சேர்ந்த சு. சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவர்.இவர் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நடத்துனராகக் கடமையாற்றி வந்தவராவார்.
இதேவேளை, மேற்படி இளைஞனின் இழப்புக் குப்பிளானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு
 குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - யாழ் குப்பிளானில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

இளைஞனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி பொலிஸாரின் வினோதச் செயல்

செவ்வாய், 12 ஜூன், 2018

தலைநகர் கொழும்பில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.இது தொடர்பில் கொழும்பு போதிராஜ மாவத்தைக்கு
 அருகில் பொலிஸார் இன்று முன்னெடுத்த விசேட நடவடிக்கையினால் பரபரப்பு ஏற்பட்டது.பெண்ணொருவரின் பணப்பையை திருடியதாக இளைஞர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை தாக்க முயன்றுள்ளனர்.
எனினும் உடனடியாக தலையிட்ட பொலிஸார், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அதுவொரு நாடகம் என தெளிவுபடுத்தினர்.மக்கள் மத்தியில் திருட்டுச் சம்பவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.இது தொடர்பான காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - இளைஞனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி பொலிஸாரின் வினோதச் செயல்

கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டி

திங்கள், 11 ஜூன், 2018

கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய அனைத்து பீடங்களுக்கிடையிலான நாடகப் போட்டியில் நடுவராக பணியாற்றிய தருணம்.
இலங்கையின் அரசியலை அப்பட்டமாக தோலுரித்து சித்தரித்திருந்தனர் சட்டபீடத்தினர் . ஒவ்வொரு பீட மாணவர்களும் சமகால விடயங்கள் பலவற்றை சித்தரித்திருந்தார்கள். பாராட்டுக்கள் எதிர்கால
 தலைவர்களுக்கு.
1ம் இடம் சட்டபீடம்
2ம் இடம் முகாமைத்துவ பீடம்
3ம் இடம் விஞ்ஞான பீடம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டி

வீசிய சூறைக் காற்றினால் யாழ் குடாநாட்டில் பல சேதங்கள்

 ,யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று வீசிய சூறைக் காற்றினால், பல இடங்களிலும் மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதங்கள் ஏற்பட்டது. உடுவில் லவ்லேன் பகுதியில் பனை மரம் முறிந்து உயர் மின் அழுத்த கம்பிகளில் வீழ்ந்தமையினால் அப்பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
இதேபோன்று வடமராட்சிப் பகுதியிலும் பனை முறிந்து வீழ்ந்ததில்மின்கம்பம் சேதமடைந்த்தோடு மின் தடையும் ஏற்பட்டது. குறித்த மின்தடை மாலையிலேயே சீர் செய்யப்பட்டது.
யாழ். நகரின் மத்தியில் பொருத்தப்பட்டிருந்த ஓர் விளம்பரப் பலகை முறிந்து வீழ்ந்த நிலையில் மக்களால் உடனடியாக இ.மி.சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அப்பகுதிக்கான மின் தடை ஏற்படுத்தப்பட்டு சீர் செய்யப்பட்டது.
சுன்னாகம் , மல்லாகம் போன்ற பகுதிகளில் வீதியோரம் நின்றிருந்த மரங்களின் கிளைகள் வீழ்ந்தமையினாலும் சிறிது நேரம்
 மின் தடை ஏற்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - வீசிய சூறைக் காற்றினால் யாழ் குடாநாட்டில் பல சேதங்கள்

மண்ணெண்ணெய் விலை செவ்வாய் முதல் குறைப்பு

நாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளது.
அதற்கமைய ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மண்ணெண்ணெய்யின் விலையை 25 ரூபா முதல் 30 ரூபா வரை குறைப்பதற்கு நேற்று முன்தினம் அரசாங்கம் தீர்மானித்தது.
நிதி அமைச்சு மற்றும் திறைசேறி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கடற்றொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அண்மையில் எரிபொருளின் விலைச்சுட்டெண் பிரகாரம் மண்ணெண்ணெய்யின் விலை 130 ரூபா வரை அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மண்ணெண்ணெய் விலை செவ்வாய் முதல் குறைப்பு

விசிய பலத்த காற்ரினால் மலையகத்தில் ; பல வீடுகள் சேதம்

சனி, 9 ஜூன், 2018

மத்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் மற்றும் தகரங்கள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
பலத்த காற்று வீசி வருவதனால் பல இடங்களில் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்து அட்டனில் பல பிரதேசங்களுக்கு நள்ளிரவு முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளன.
ஒரு சில பிரதேசங்களுக்கு மின்சாரம்  இன்று அதிகாலை வேளையில் வழமைக்கு திரும்பிய போதிலும், ஏனைய சில பகுதிகளுக்கு இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என
 தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி மழையுடன் பலத்த காற்று வீசி வருவதனால் மண்சரிவு அபாயப்பகுதிகளில் வாழ்பவர்களும், மரங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்களும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் 
கேட்டுக்கொண்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - விசிய பலத்த காற்ரினால் மலையகத்தில் ; பல வீடுகள் சேதம்

சில பகுதிகளில் யாழ்.குடாநாட்டின் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(09) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் 
தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ்.தொண்டைமானாறு,கெருடாவில், பொக்கணை, மயிலியதனை, ஊரிக்காடு, அக்கரை, வளலாய், சுருவில், மெலிஞ்சிமுனை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சில பகுதிகளில் யாழ்.குடாநாட்டின் நாளை மின்தடை