நாட்டில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு!!!

ஞாயிறு, 22 மே, 2022

இலங்கையின் சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 1000 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சில பகுதிகளில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை சுமார் 1050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக
 தெரிய வந்துள்ளது.
சிங்கள – தமிழ் புத்தாண்டிலிருந்து ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை சுமார் 950-980 ரூபாவாக காணப்பட்டுள்ளது.இந்த நிலையில் முதன்முறையாக இந்த வாரம் கோழி இறைச்சியின் விலை 1000 ரூபாயைத் 
தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.சமகாலத்தில் 
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாளாந்தம் பல பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக