நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலியாக பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்களிலும் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முச்சக்கரவண்டிகளில் முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபாவும், மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 80 ரூபாவும்
அறவிடப்படும் என தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்திருந்தார்.
எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியதையடுத்தே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் விலைக்கு நிகராக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும், பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக