நாட்டில் பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் நுகர்வோரிடம் கோரிக்கை

புதன், 18 மே, 2022

கொழும்பு துறைமுகத்திற்கு .18-05-2022.இன்றைய தினம் வரவிருக்கும் கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கி விநியோகிக்கப்படும் வரை நாட்டில் பெற்றோல் கிடையாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
 தெரிவித்துள்ளது.
சுமார் 2000 மெற்றிக் தொன் பெற்றோலை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோகித்த போதிலும் அது தேவைக்கு போதுமானதாக இல்லை என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனவே, பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்திய கடன் அடிப்படையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்து 40,000 மெற்றிக் தொன் டீசலை இறக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 
கூறப்படுகின்றது.
இதனால் டீசல் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு போக்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் போக்குவரத்துக்கு அந்த அளவு டீசல் நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் 
கூறப்படுகின்றது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக