அம்பு வில்லு பாவித்த முதல் இனம் இலங்கையில் தென்பகுதில்

ஞாயிறு, 14 ஜூன், 2020

இலங்கையின் தென்பகுதில் உள்ள மழைக் காடுகளில்(Fa-Hien Lena) உள்ள குகை ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட கற்கள், சிறிய ஆயுதங்கள் 48,000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை 
என்பது நிரூபனமாகியுள்ளது. அவர்கள் 48,000 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே 
அம்பு வில்லை பாவிக்க கற்றுக்கொண்டு இருப்பது பெரும் ஆச்சரியமான 
விடையம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இதுவரை உலகில் ஆபிரிக்காவில் தான் மிகப் பழமையான 
ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இவை சுமார் 64,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை.
அவர்களும் அம்பு வில்லை பாவிக்க கற்றுக்கொண்டு இருந்தார்கள். மேலும் ஜேர்மனில் கண்டு பிடிக்கப்பட்ட சில ஆதிகால ஆயுதங்கள் 18,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில் உலகில் 2வது மிகப் பழைய கற்கால ஆயுதங்கள் இலங்கையில் தான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் வசித்த மக்கள், மிகவும் பழமைவாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதில்
 ஒரு ஐயப்பட்டும் இல்லை.
இந்த கற்கால மனிதர்கள் மொழிகள் தோன்ற முன்னரே இலங்கையில் வசித்து வந்துள்ளார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அல்லது இவர்களில் ஒரு பகுதியினரே பின் நாளில் தமிழர்களாக மாறி இருக்க் வாய்ப்புகள் அதிகம்.அந்த வகையில் உலகின் மூத்த குடி தமிழ் குடி என்று சொல்வதில் ஒரு அர்த்தம் 
உள்ளது அல்லவா.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக