நாளை மறுதினம் (14-06-20) ஞாயிற்றுக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பின், கொம்பனித் தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொரளை, மருதானை (கொழும்பு 02,03,07,08,10) ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு
அமுல்படுத்தப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (14) முற்பகல் 9.00 மணி முதல் செவ்வாய் நள்ளிரவு 12.00 மணி வரையான 15 மணி நேரத்திற்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, சபை அறிவித்துள்ளது.
இக்காலப் பகுதியில், (கொழும்பு 01) கொழும்பு கோட்டை பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என சபை தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், தங்களுக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக