முக்கிய அறிவிப்பு பாடசாலையில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோருக்கு

திங்கள், 1 ஜூன், 2020

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தேவையான இறுதி ஐந்தாண்டுக்கான வாக்காளர்கள் பட்டியல் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் புதிய முறைமையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.கொரோனா
 வைரஸ் நிலைமை
 காரணமாக மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் நோக்கில், பாடசாலைகளுக்கு
 மாணவர் சேர்க்க தேவையான வாக்காளர் 
பட்டியல் தொடர்பான தகவல்களை பெற மாவட்ட தேர்தல் செயலகங்களுக்கு செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
மேலும், விண்ணப்பத்தை 
பூர்த்தி செய்ய தேவையான தகவல்களை கிராம சேவர்கள் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.elections.gov.lk என்ற 
இணையத்தளத்திற்கு சென்று தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை தட்டச்சு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள 
முடியும் என கூறியுள்ளது.2021 ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டுக்கு பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோர் அதற்கான விண்ணப்பத்தில் ஒரே விலாசத்தில் 5 ஆண்டுகள் வாக்காளராக பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக