ஆண்டுக்கு இலங்கையில் 25 ஆயிரம் பேரைப் பலியெடுக்கும் புகையிலை!

புதன், 31 மே, 2017

இலங்கையில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் பேர் புகைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களால் மரணமாவதாக, இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலக புகையிலை தவிர்ப்பு நாள் இன்றாகும் (மே 31).
இதனை முன்னிட்டு இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஆண்டு தோறும் புகையிலைப் பொருட்களுக்கான வரியின் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு 100 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கிறது. ஆனால் புகையிலையுடன் 
தொடர்புடைய பொருட்களால் ஏற்படும் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, இலங்கை அரசாங்கம் ,  ஆண்டுக்கு 140 பில்லியன் ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 42 பில்லியன் ரூபா இழப்பு 
ஏற்படுகிறது.
இலங்கையில் 24 வீதமான ஆண்களும், 2.3 வீதமான பெண்களும் புகைப்பழக்கம் கொண்டவர்களாவர்.
பிராந்தியத்தில் ஆகக்குறைந்த புகைப்பழக்கம் கொண்டவர்களைக் கொண்ட நாடாக பூட்டான் உள்ளது. அதற்கடுத்து, குறைந்தளவு புகைப்பழக்கத்தைக் கொண்டவர்களைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குகிறது.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

READ MORE - ஆண்டுக்கு இலங்கையில் 25 ஆயிரம் பேரைப் பலியெடுக்கும் புகையிலை!

இலங்கையில் தொடரும் துயரம் தெற்கில் வெள்ளம், வடக்கில் வரட்சி!

இலங்கையிள் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வரட்சி நீடிப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வடக்கில் 130,243  குடும்பங்களைச் சேர்ந்த 440,531 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் 115,020 பேரும், யாழ்ப்பாணத்தில் 121,057 பேரும், கடும் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிலும் வரட்சியால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச செயலர் பிரிவில் 14,748 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்தவாரம், தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக 
அதிகரித்துள்ளது.
94 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளனர். மேலும் ஆறு இலட்சம் பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

READ MORE - இலங்கையில் தொடரும் துயரம் தெற்கில் வெள்ளம், வடக்கில் வரட்சி!

இளைஞர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்!!!

செவ்வாய், 30 மே, 2017

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லியப்பு பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவை லெட்சுமி தோட்டத்தை சேர்ந்த 25 வயதுடைய கணேசன் தயாளன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற ரயிலில் குறித்த இளைஞர் நேற்று மோதுண்டுள்ளார். சடலத்தை மீட்ட ரயில் அதிகாரிகள் ரொசல் ரயில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

READ MORE - இளைஞர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்!!!

மூதுாரில் 3 பெண் குழந்தைகள் மீது பாலியல் வதை

திரு­கோ­ண­ம­லை­யில் மூன்று பெண் குழந்­தை­கள் பாலி­யல் ரீதி­யில் வதைக்­கப்­பட்­ட­னர். அதைச் செய்த குற்­றச் சாட்­டில் நான்கு பேர் கைது­செய்­யப்­பட்­ட­னர். இத­னால் மூதூர் பெரிய­ வெளிப் பகு­தி­யில்
நேற்­றுப் பெரும் பதற்­றம் ஏற்­பட்­டது. பொது­மக்­கள் கொந்­த­ளித்­த­னர். பொலி­ஸா­ரு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.
குற்­றத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் என்று சந்­தே­கி­கப்­ப­டு­ப­வர்­க­ளைப் பணிக்­க­மர்த்­திய கட்­டட ஒப்­பந்­தக்­கா­ரரை பிடித்து, கட்டி வைத்து உதைத்­த­னர். வீதியை மறித்து மக்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். மூதூர் தமிழ்ப் பாட­சா­லை­கள் சில­வற்­றின் மாண­வர்­க­ளும் நேற்­றைய தினம் போராட்­டத்­தில்
 குதித்­த­னர்.
மூதூர், பெரி­ய­வெளி, மல்­லி­கைத்­தீ­வில் இடம்­பெற்ற வதைச் சம்­ப­வம் குறித்­துத் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது,
நேற்­று­முன்­தி­னம் மல்­லி­கைத் தீவு பிர­தே­சத்­தைச் சோ்ந்த 3 மாண­வி­கள் அற­நெ­றிப் பாட­சா­லைக்­குச் சென்­ற­னர். அவர்­க­ளில் இரு­வ­ருக்கு 7 வயது. ஒரு­வ­ருக்கு 8 வயது. நேரம் தாழ்த்­தியே மூவ­ரும்
 வீடு திரும்­பி­னர்.
தாம­தத்­துக்­கான கார­ணத்­தைப் பெற்­றோர் துரு­வி­னர். பாட­சா­லை­யில் துப்­பு­ர­வுப் பணி­யில் ஈடு­பட்­டுத் திரும்­பி­னோம் என்று குழந்­தை­கள் பதி­ல­ளித்­த­னர். அத்­தோடு தம்­மைச் சிலர் மல­ச­ல­கூ­டத்­தில் வைத்து பாலி­யல்­ரீ­தி­யில் வதைத்­த­னர் என்­றும் கூறி அழு­த­னர்.
உடனடியாகவே தொலைபேசியூடாக மூதூா் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலை கேட்டறிந்த உடன் அந்தப் பகுதிக்குச் சென்ற பொலிஸாா் மல்லிகைத் தீவு பாடசாலைக் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனா்.
கட்டட கட்டுமானத்தைப் பொறுப்பெடுத்திருந்த ஒப்பந்தகாரரை அந்தப் பகுதி மக்கள் பிடித்து கட்டிவைத்திருந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் தோன்றியது. அங்கு விரைந்த பொலிஸார் அவரை விடுவித்ததுடன் அவரின் உதவியுடன் மேலும் இருவரைக் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்டவர்கள் மூதூர் அல்லைநகர் மற்றும் செல்வநகர் பகுதிகளைச் சேர்ந்த 18, 30, 36, 40 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனா். சந்தேகநபா்கள் நேற்று மூதூா் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டாா். மாணவிகள் மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்காகச் 
சேர்க்கப்பட்டனர்.
சம்பவத்தை அடுத்து நேற்றுக் காலை 8 மணிக்கே கிளிவெட்டிப் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைக்கு முன்பாக நீதியை நிலைநாட்ட வலியுறுத்திப் போர◌ாட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் பொதுமக்களும் இணைந்துகொண்டனர். இதனால் அந்த இடத்தில் பதற்றம் தெ◌ாற்றியது. பின்னர் அவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் 
தொடங்கினர்.
மதியம் 12.15 மணியளவில் கிழக்கு மாகாண கல்வியமைச்சா் எஸ்.தண்டாயுதபாணி சம்பவ இடத்துக்கு வந்தார். பொலிஸாா் இது தொடா்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீா்வு கிடைக்கும், தற்போது ஆா்பாட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதன்பின் ஆா்ப்பாட்டம் 
கைவிடப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்க் குழந்தைகள் என்றும் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் முஸ்லிம்கள் என்றும் கூறப்படுவதால் அந்தப் பகுதியில் சமூகப் பதற்றங்களோ வன்முறைகளோ ஏற்படாத வகையில் பாதுகாப்பு இறுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் 
தெரிவித்தனர்.
மூதூ சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றம் இழைத்தவர்களை நீதமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெற இடமளிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>


READ MORE - மூதுாரில் 3 பெண் குழந்தைகள் மீது பாலியல் வதை

யாழ் நாவற்குழி கிராமம் பெயர் மாற்ரம்செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி கிராமத்தின் பெயரை சாந்திபுரம் என்று மாற்றுவதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் அதிகமாக செறிந்த வாழ்ந்த இடங்களில் நாவற்குழி 
கிராமமும் ஒன்றாகும்.
இக்கிராமத்திற்கு அருகில் ஒரு பௌத்த விகாரையும் உள்ளது.
பௌத்த விகாரை மற்றும் நாவற்குழியின் பாதுகாப்புக்காக அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து அகன்று செல்லுமாறு தற்போது அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளின் ஒரு அங்கமாக நாவற்குழி கிராமத்தின் பெயரை சாந்திபுரம் என்று மாற்றுவதற்கும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதற்கு இப்பிரதேச பௌத்த பிக்கு ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனினும் நாவற்குழி பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக செய்தியில் தொடர்ந்தும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>


READ MORE - யாழ் நாவற்குழி கிராமம் பெயர் மாற்ரம்செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு!

மின்விநியோகத்தடை ஜுன் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் !

ஜுன் மாதம் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக இந்த மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குறிப்பிட்டசில நாட்களில் முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை அமுலில் இருக்கும் எனவும்இலங்கை மின்சார சபை 
அறிவித்துள்ளது.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

READ MORE - மின்விநியோகத்தடை ஜுன் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் !

உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

தற்போது பலரது உடலில் போதிய அளவில் ஆற்றல் மற்றும் வலிமை இல்லை. இதற்கு அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் உள்ள தவறு தான் காரணம். தவறான உணவுப் பழக்கவழக்கத்தினால், உடலின் ஆற்றல் மற்றும் வலிமைக்கு வேண்டிய காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, புரோட்டீன்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.
இப்படி உடலில் குறைவாக உள்ள சத்துக்களின் அளவை அதிகரித்தால் தான் உடல் வலிமையோடு இருப்பதோடு, சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். அதிலும் நீங்கள் ஜிம் செல்பவராயின், கண்டிப்பாக இச்சத்துக்கள் அவசியம் தேவை. இவை இருந்தால் தான் ஜிம்மில் உடற்பயிற்சியை செய்ய முடியும்.
சரி, இப்போது உடலின் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து அவற்றை உட்கொண்டு உங்கள் உடலை வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ளுங்கள்.
ஓட்ஸ்
ஓட்ஸில் சுத்திகரிக்கப்படாத கார்ப்போஹைட்ரேட் உள்ளதால், இவை மெதுவாக செரிமானமாகி, இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரித்து, நீண்ட நேரம் உடலில் ஆற்றலைத் தக்க வைக்கும். எனவே நீங்கள் எப்போதும் மந்தமாக இருப்பதை உணர்ந்தால், ஓட்ஸை காலை வேளையில் உட்கொண்டு வாருங்கள்.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் கனிமச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை இரத்த சிவப்பணுக்களை உருவாக்கி, தசைகள் மற்றும் உடலின் இதர பாகங்களுக்கு ஆக்ஸிஜன் சீராக செல்ல வழிவகுத்து, உடலை ஆற்றலுடனும், உறுதியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.
காபி
காபி உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க உதவும் ஓர் பானம். இந்த பானத்தைக் குடித்தால், மைய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, சோர்வு உடனடியாக நீக்கப்படும்.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் உடலின் வலிமை மற்றும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் மைக்ரோ நியூட்ரியன்ட்டுகள் அதிகம் உள்ளது. மேலும் இவைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதோடு, மெதுவாக செரிமானமாகி, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இவை டோபமைன் என்னும் கெமிக்கலை உற்பத்தி செய்து, ஆற்றலுடன் நீண்ட நேரம் இருக்க உதவுவதுடன், கவனத்தை அதிகரிக்கவும் உதவும்.
வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளதால், அவை இதய ஆரோக்கியத்தை அதிகரித்து, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும் வேர்க்கடலை வெண்ணெய் ஓர் சிறந்த ஆற்றல் மற்றும் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருள். இதில் கலோரிகள் அதிகம் மற்றும் மெதுவாக செரிமானமாகும். முக்கியமாக வேர்க்கடலை வெண்ணெயை காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுடன் சேர்த்து எடுத்துக் கொள்வது நல்லது.
மீன், சிக்கன், முட்டை
இவைகளில் புரோட்டின் அதிகம் உள்ளது. இவை தசைகளின் வளர்ச்சிக்கும், புதுப்பிக்கவும் உதவும். மேலும் இவைகள் மெதுவாக செரிமானமாவதோடு, நீண்ட நேரம் சுறுசுறுப்புடனும், வலிமையோடும் இருக்க உதவும்.
சிவப்பு திராட்சை
சிவப்பு திராட்சையில், உடலின் ஆற்றலை அதிகரிக்கும் ரெஸ்வெரடால் உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவில் சர்க்கரை உள்ளதால், இவை உடனடி ஆற்றலை வழங்குவதோடு, உடலின் உறுதியையும் மேம்படுத்த உதவும்.
பீட்ரூட் ஜூஸ்
உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸ் குடித்தால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும். ஏனெனில் பீட்ரூட்டில் உடல் உறுதியை அதிகரித்து, சோர்வைக் குறைக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.
திணை
தானியங்களுள் ஒன்றான திணையில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்க்கத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றைக் கொண்டு கஞ்சி அல்லது உப்புமா செய்து உட்கொண்டு வந்தால், நீண்ட நேரம் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மேலும் இது பத்தே நிமிடங்களில் வேகக்கூடியது என்பதால் விரைவில் சமைத்து சாப்பிட ஏற்ற ஓர் உணவுப் பொருள்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

READ MORE - உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

மழையுடன் கூடிய மினி சூறாவளியினால் வவுனியாவில் பாரிய இழப்புக்கள் !

வெள்ளி, 26 மே, 2017

வவுனியாவில் இன்று மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினிசூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிசார் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

வவுனியா நகரில் இன்று மதியம் முதல் 3 மணிநேரம் மழையுடன் கூடிய மினிசூறாவளி வீசியது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல்வேறு கட்டங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

 இத்துடன்  மன்னார் வீதி குருமன்காட்டு சந்தியில் வீதியோரத்திலிருந்த  மரமோன்று முறிந்து வீழ்ந்ததில்  மன்னார் – வவுனியா வீதிக்கான போக்குவரத்தும்  சிறிது நேரம்  தடைப்பட்டது.
வவுனியா மாவடட செயலக வளாகத்துக்குள்ளும் செல்லும் வழியில்  வீதியோரத்திலிருந்த  மரமோன்று முறிந்து வீழ்ந்ததில்   சிறிது நேரம்    மாவடட செயலக வளாகத்துக்குள்ளும் செல்லும்    தடைப்பட்டது.
  சுமார் ஒருமணிநேர போராட்டத்தின் மத்தியில்   எல்லா  மரம் வெட்டி அகற்றப்பட்டது

மற்றும் வவுனியா இலுப்பையடிசந்தியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பாதையில்   மரமொன்று கார் மீது வீழ்ந்ததில் கார் பகுதியளவில் சேதமடைந்ததுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை

இவ் கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வவுனியாவில் பல்வேறு இடங்களில் மின்சார கம்பிகள்  அறுந்துள்ளது
இது தவிர, வவுனியா மாவட்ட செயலகம், வைத்தியசாலை மற்றும் நகரின் பல பகுதிகளிலும் உள்ள மரங்கள், விளம்பரபலகைகள் முறிந்து விழுந்தமையால் வீடுகள், கட்டிடங்கள், வீட்டு மதில்கள் என்பனவும் சிறு சேதங்குளக்கு உள்ளாகியுள்ளன. வவுனியா நகரப்பகுதியின் பரவலாக மின்சாரத்தடையும் ஏற்பட்டுள்ளது
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>




READ MORE - மழையுடன் கூடிய மினி சூறாவளியினால் வவுனியாவில் பாரிய இழப்புக்கள் !

சிறுபோக செய்கையில் யாழ்.மாவட்ட விவசாயிகள் ஆர்வம்?

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது சிறுபோக விவசாயச் செய்கையில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரட், பீற்ரூட், தக்காளி, வெங்காயம், மிளகாய், பயிற்றங்காய் உள்ளிட்ட மரக்கறிப் பயிர்கள் சிறுபோக மரக்கறிச் செய்கைகளாக விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ளமையை அவதானிக்க
 முடிகிறது .
குறிப்பாக வலிகாமத்தில் . நவற்கிரி ,சிறுப்பிட்டி .ஆவரங்கால் அச்சுவேலி தோப்பு ஏழாலை,குப்பிளான், புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, வசாவிளான், ஈவினை, மயிலங்காடு, சுன்னாகம்,இணுவில் .மருதனார்மடம், அச்செழு, புத்தூர், கோப்பாய், நீர்வேலி, இருபாலை, கோண்டாவில், உரும்பிராய், ஊரெழு உள்ளிட்ட பகுதிகளிலில் சிறுபோக மரக்கறிப் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>
READ MORE - சிறுபோக செய்கையில் யாழ்.மாவட்ட விவசாயிகள் ஆர்வம்?

ஆயிரம் பட்டதாரிகளுக்குவடக்கில் வேலை நாடாளுமன்றில் உறுதி?


வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் அரசு கவனம் செலுத்தும் என்றும், ஆரம்ப கட்டமாக வடக்கிலிருந்து ஆயிரம் பேர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக தொழில்களை வழங்குமாறு அரசை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டு வரப்பட்டது
இந்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அரசின் சார்பில் மேற்படி உறுதிமொழியை வழங்கினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கில் பட்டதாரிகள் மட்டுமல்ல, இளைஞர்களும் வேலையின்றி இருக்கின்றனர். இந்தப் பிரச்சினை சம்பந்தமாக அரசு கவனம் செலுத்தியுள்ளது.
முதலீடுகள் வரவழைக்கப்படும். ஆரம்ப கட்டமாக ஆயிரம் பட்டதாரிகளுக்கு வடக்கில் வேலை வழங்கப்படும். அதன் பின்னர் கிழக்கில் உள்ளவர்களின் குறைகளும் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அரச நிர்வாகத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் வேலைகோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரச பிரதிநிதிகளை அனுப்பித் தகவல்களைத் திரட்டினேன்.
போருக்குப் பின்னர் வடக்கிலுள்ள பலருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், சுமார் 9 ஆயிரம் வரையான பட்டதாரிகளுக்கு வேலையில்லை என்பதையும் ஏற்கவேண்டும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
கடந்தகாலங்களில் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அரச முகாமைத்துவ சேவைக்கு 5 ஆயிரம் பேர் இணைத்து 
கொள்ளப்படவுள்ளனர்.
இதற்கான பரீட்சை 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் போதும் வடக்கு, கிழக்கில் உள்ள பட்டதாரிகள் உள்வாங்கப்படுவர். ஏனைய துறைகளிலும் வெற்றிடங்கள் இருக்கின்றன. அத்துறைகளுக்கும் பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் போர் காரணமாக 35 வயது தாண்டிய பட்டதாரிகளும் இருக்கின்றனர். இவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். சமுர்த்தித் துறைக்கு வடக்கு, கிழக்கில் இருந்து மாத்திரம் ஆயிரத்து 500 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர் என தெரிவித்தார்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>




READ MORE - ஆயிரம் பட்டதாரிகளுக்குவடக்கில் வேலை நாடாளுமன்றில் உறுதி?

விமான நிலையத்தில் ஜூன் 1 முதல் பயணிகள் கொண்டு செல்லும் பொதிகளுக்கு புதிய நடைமுறை!

வியாழன், 25 மே, 2017

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படும் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி
 தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சூழலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து
 தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பாதுகாப்பு நடைமுறைக்கு அமைய பயணி ஒருவர் தனது கைப் பையில் எடுத்துச் செல்லும் திரவ வகையான ஸ்பிரே, ஜெல் போன்ற பொருட்களுக்கு வரையறை விதிக்க நடவடிக்கை
 எடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர், பானங்கள், சூப், ஜேம், சோஷ், இனிப்புகள், திரவங்கள், கிறீம், மருந்துகள், எண்ணெய், ஸ்பிரே, ஜெல், வாயு அழுத்தங்களை போன்றவை எடுத்துச் செல்லப்படுவது குறைக்கப்படும்.
மேலும் அனைத்து பொருட்களும் ஒரு லீட்டருக்கு குறைவானதாக இருக்க வேண்டும் என்பதுடன் வெளிப்படையாக தெரியும் பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட வேண்டும்.
ஒரு பயணி இதுபோன்ற ஒரு பொதியை மாத்திரமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் ஹெட்டியாராச்சி 
குறிப்பிட்டுள்ளார்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>



READ MORE - விமான நிலையத்தில் ஜூன் 1 முதல் பயணிகள் கொண்டு செல்லும் பொதிகளுக்கு புதிய நடைமுறை!

கண்டிப்பா படிங்க மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும் பெண்கள் ?

கிழங்கு என்றாலே கையெடுத்துக் கும்பிடுகிறவர்களையும் தன் ருசியால் கட்டிப் போட வைத்து விடும் மரவள்ளி. குறிப்பிட்ட சீசனில் அதிகம் கிடைக்கும். கிழங்கைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிற எல்லோருக்கும் மரவள்ளிக்கிழங்கும் அந்தப் பட்டியலில் உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், மற்ற கிழங்குகளுடன் ஒப்பிடும் போது, மரவள்ளியில் மருத்துவக்
 குணங்கள் அதிகம்!
எப்போதும் உருளைக்கிழங்கே கேட்டு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு ஒரு மாற்றாக மரவள்ளிக் கிழங்கில் விதம் விதமான
உணவுகளை செய்து கொடுக்கலாம். உருளையில் செய்ய முடியாத பல உணவுகளை இதில் செய்ய முடியும் என்பதும், ஆரோக்கியமாக சமைக்கலாம் என்பதும் கூடுதல் தகவல்கள்” என்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.மரவள்ளிக்கிழங்கின் மகத்துவம் பற்றிச் சொல்லும் அவர், அதை வைத்து ஆரோக்கியமான 3 ரெசிபிகளையும் செய்து 
காட்டியிருக்கிறார்.
பிரேசிலில் பிறந்த மரவள்ளிக்கிழங்கு மெதுவாக டிராபிகல் நாடுகளில் பரவி இதன் சுவை காரணமாக தென் அமெரிக்கா, தமிழ்நாடு, கேரளா என எல்லா இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் பெரும்பாலும் சிப்ஸ், வேஃபர்ஸ் தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு
 வேறு பெயர்களும் உண்டு. உணவுப்பொருளான மரவள்ளிக் கிழங்கு, பல்வேறு தொழிற்சாலைகளில் – குறிப்பாக நொதித்தல் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. 
மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ஃப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்டது.ஆரோக்கியமான பருமனுக்கு உதவுகிறது. ஆசிய நாடுகளில் இதைப் பதப்படுத்தி வீட்டிலேயே கஞ்சி மாவு செய்து குழந்தைகளுக்கு ஊட்டுவார்கள். எளிதில் ஜீரணமாகும் இந்தக் கஞ்சி குழந்தையின் எடையை அதிகரிக்கப் 
பயன்படுகிறது.
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் 
அளவை குறைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும்… முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.
அல்ஸீமர் எனும் ஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. உடலில் நீரில் சமநிலையை சரி செய்ய உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட ஜவ்வரிசி வயிற்றுப்புண்
 ஆற்றுவதற்கும், எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது. அல்சர் நோய் இருப்பவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை நீர்க்க காய்ச்சி 1 மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக குடித்து வர வலி குறையும். நாள்பட்ட சீதபேதி இருப்பவர்களும் பாயசம் போல மோர், உப்பு சேர்த்து குடிக்க நல்ல சக்தி கிடைக்கும். வயிற்று வலி குறையும்.
என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)
உருளைக்கிழங்கைப் போன்ற சுவை உடைய மரவள்ளிக்கிழங்கு அதை விட சத்தானது.
பச்சை மரவள்ளிக்கிழங்கில்…
ஆற்றல் 157 கிலோ
கலோரிகள்
புரதச்சத்து 0.7 கிராம்
கொழுப்புச்சத்து 0.2 கிராம்
மாவுச்சத்து 28.2 கிராம்
நார்ச்சத்து 0.6 கிராம்
கால்சியம் 50 மி.கி.
பாஸ்பரஸ் 40 மி.கி.
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
ஆற்றல் 338 கிலோ
கலோரிகள்
புரதச்சத்து 1.3 கிராம்
கொழுப்புச்சத்து 0.3 கிராம்
மாவுச்சத்து 82.6 கிராம்
நார்ச்சத்து 1.8 கிராம்
கால்சியம் 91 மி.கி.
பாஸ்பரஸ் 70 மி.கி.
பச்சை மரவள்ளியைவிட, மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், எண்ணெயில் வறுத்து சாப்பிடாமல் அவனில் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது (முக்கியமாக பருமன் உள்ளவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும்).
ஆரோக்கிய ரெசிபி
சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு
என்னென்ன தேவை?
வேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு – 1 கப், பச்சை சுண்டைக்காய் – 100 கிராம், புளி – எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்க, பூண்டு – 10 பல், வெங்காயம் – 2, தக்காளி -1, உப்பு – தேவைக்கேற்ப, குழம்பு மிளகாய்தூள்- 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு சுண்டைக்காயை சேர்த்து வதக்கி, மரவள்ளிக்கிழங்கு துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, புளிக்கரைசல் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியாக சிறிது நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.
ஆரோக்கிய ரெசிபி
மரவள்ளிக்கிழங்கு புட்டு
என்னென்ன தேவை?
வேக வைத்து, ஆற வைத்து நீளமாகத் துருவிய மரவள்ளிக் கிழங்கு – 100 கிராம், வெல்லம் அல்லது பனைவெல்லம் – 50 கிராம், தேங்காய்த் துருவல்- 50 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு- சிறிது, ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து ஆறியதும் துருவுங்கள். அப்போதுதான் நன்றாகத் துருவ வரும். அத்துடன் மற்ற பொருட்
களைக் கலந்து, அப்படியே பரிமாற
வேண்டியதுதான்.
ஆரோக்கிய ரெசிபி
மரவள்ளிக்கிழங்கு அடை
என்னென்ன தேவை?
தோல் நீக்கி, அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு – 1 கப், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 1 கைப்பிடி, காய்ந்த மிளகாய் – காரத்துக்கேற்ப, பூண்டு – 5 பல், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – சிறிது, எண்ணெய் – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை ஊற வைக்கவும். ஊறியதும் அவற்றுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு சேர்த்து அரைக்கவும். பிறகு அதில் வேக வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும்.
 உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து அடைகளாக வார்க்கவும். வெங்காயம், கேரட் துருவல் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் 
பரிமாறவும்
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>



READ MORE - கண்டிப்பா படிங்க மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும் பெண்கள் ?

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த ஆலய கட்டடம் தேடுதல் தீவிரம்

சனி, 20 மே, 2017

மட்டக்களப்பு, ஆரையம்பதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மண்டபம் இன்று மாலை இடிந்து விழுந்ததில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும்
 தெரியவருவதாவது,
குறித்த ஆலயத்தின் மண்டப கட்டட பணிகள் நிறைவடைந்து அதற்கான பிளேட் கொங்ரீட் இடும் பணிகளின் போதே கட்டடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதன்போது கட்டடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கிருந்து ஆறுபேர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியொருவர் 
தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இச் சம்பவத்தால் அப் பகுதி சோக மயமாக காட்சியளிக்கிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - மட்டக்களப்பில் இடிந்து விழுந்த ஆலய கட்டடம் தேடுதல் தீவிரம்

ஏற்படு தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும்.!

கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் 
மெட்டபாலிசம் மற்றும் 
வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும்.
 இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் 
ஹைப்பர் தைராய்டு:ஹைப்பர் : ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும். அறிகுறிகள்: அறிகுறிகள்: * அதிகமாக வியர்ப்பது * தும்மல் * எதிலும் கவனம் செலுத்த முடியாமல் 
இருப்பது * நினைவாற்றல் பிரச்சனை * மோசமான குடலியக்கம் * படபடப்பு * மன அழுத்தம் * எடை குறைவு * மாதவிடாய் பிரச்சனைகள் * அதிகப்படியான சோர்வு ஹைப்போ தைராய்டு: ஹைப்போ தைராய்டு: ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும். 
அறிகுறிகள்: 
அறிகுறிகள்: * நகங்களில் வெடிப்பு * மலச்சிக்கல் * உடல் பருமன் * தசைப் பிடிப்புகள் * மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு * கழுத்தின் முன் பகுதியில் வீக்கம் * மிகுதியான களைப்பு * நினைவாற்றல் பிரச்சனை * வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி * மன இறுக்கம் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது.
 அதை ஒருவர் 
உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம். தேவையான பொருட்கள்: தேவையான பொருட்கள்: பச்சை வால்நட்ஸ் – 40 தேன் – 1 கிலோ செய்முறை: செய்முறை: 
வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும். Image Courtesy உட்கொள்ளும் முறை: உட்கொள்ளும் முறை: இந்த தேனை தினமும் காலை மற்றும் 
மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும். இப்போது இதன் இதர நன்மைகளைக் காண்போம். நன்மை #1 நன்மை #1 இதில் வைட்டமின் சி, அயோடின் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும். நன்மை #2 நன்மை #2 பச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் 
சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.
 நன்மை #3 நன்மை #3 
அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். நன்மை #4 நன்மை #4 மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சனையை சந்திக்கும் பெண்கள், பச்சை வால்நட்ஸ் ஊற வைத்த தேனை சாப்பிட்டால், பிரச்சனைகள் விரைவில் குணமாகும். நன்மை #5 நன்மை #5 முக்கியமாக இந்த தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - ஏற்படு தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும்.!

தனிமையிலிருந்த ஆசிரியர் யாழ் அச்சுவேலி கொலை!

வெள்ளி, 19 மே, 2017

யாழ் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையிலிருந்த ஆசிரியர் ஒருவர் கொலை 
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் திருடுவதற்காக சென்ற மர்மநபர்கள் தனிமையிலிருந்த ஆசிரியரை தாக்கியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் குறித்த ஆசிரியர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - தனிமையிலிருந்த ஆசிரியர் யாழ் அச்சுவேலி கொலை!

யாழ் புத்தூர் கிராமத்தில் பாடசாலை மாணவர்கள் இப்படி ஒரு முடிவாம்?

 யாழ்  புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 09 வரையில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். குறித்த பாடசாலைக்கு புத்தூர் கிராமத்தில் ஒரு பகுதியை சேர்த்த மாணவர்கள் கடந்த சில வாரங்களாக பாடசாலைக்கு செல்வதில்லை.
மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை அதிபரிடம் சென்று தமது பிள்ளைகள் இந்த பாடசாலைக்கு கல்வி கற்க வருவது பாதுகாப்பு இல்லை எனவே பிள்ளைகளின் பாடசாலை விடுகை பத்திரத்தினை தருமாறு 
சுமார் 90 க்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோர்கள் கோரியுள்ளனர்.
அதற்கு பாடசாலை அதிபர் சம்மதிக்காத நிலையில் தற்போது பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்காது
 தடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலர் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தர் ஆகியோர் பெற்றோர்களிடம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு கோரி சந்திப்பு ஒன்றினையும் நடாத்தி இருந்தனர்.
அதன் போதும் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பாதுகாப்பு இல்லை அதனால் நாம் வேறு பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்ப உள்ளோம் என கூறியுள்ளனர்.
அதேவேளை குறித்த கிராமத்தில் உள்ள கிந்துசிட்டி எனும் மயானத்தை அகற்றுமாறு ஒரு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இன்னுமொரு தரப்பினர் அந்த மயானம் வேண்டும் என கோரி மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அதனை அடுத்து நீதிமன்றம் மயானத்தை சுற்றி 10 அடி உயரமான மதிலினை கட்டி மயானத்தில் சடலங்களை எரிக்கும்மாறும் எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் குறித்த மயானத்தில் மின்சாரம் மூலம் சடலங்களை எரிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
இந்த மயான பிரச்சனையின் பின்னணியில் தான் பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவது இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மயானத்தை சுற்றி சுற்று மதில் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளியான சிறுப்பிட்டியை சேர்ந்த பாஸ்கரன் கமல்ராஜ் (வயது 28) என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - யாழ் புத்தூர் கிராமத்தில் பாடசாலை மாணவர்கள் இப்படி ஒரு முடிவாம்?

பஸ் விபத்தில் ஊர்காவற்றுறையில் மாணவன் பலி

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்தில் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இவ் விபத்துச் சம்பவம்இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியே பாலக்காட்டுச் சந்தியில் வைத்து துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் மீது மோதியுள்ளது.

இதன்போது மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் அகிலன் என்ற மாணவனே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.

இதையடுத்த அப்பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள் குறித்த பஸ் வண்டியை அடித்து நொருக்கியுள்ளனர். இதனால் அப்பகுதி பெரும் கலவரமடைந்ததால் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

இதனால் பஸ் சாரதி தப்பியோடிய நிலையில், பொலிஸார் சாரதியை கைதுசெய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - பஸ் விபத்தில் ஊர்காவற்றுறையில் மாணவன் பலி

இனி கட்டாயமாக்கப்படவுள்ள கைவிரல் அடையாள பதிவு

வியாழன், 18 மே, 2017

அரச நிறுவனங்களில் சேவையாளர்கள் பணிக்கு வருகை தருவதையும் பணியை முடித்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள மற்றும் கூட்டுத்தாபன பிரதானிகளுக்கும் இதற்கான விசேட சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துமாறு இதற்கு முன்னர் அறிவித்திருந்தபோதும், உரிய முறையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
 யிலேயே, சுற்றுநிரூபம் ஊடாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி
 தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - இனி கட்டாயமாக்கப்படவுள்ள கைவிரல் அடையாள பதிவு