உலுக்கிய கோர விபத்து..!! பெற்றோர் ஸ்தலத்தில் பலி…

சனி, 17 ஆகஸ்ட், 2019

நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்ட பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்ததாக தெரியவருகின்றது.  ஏனைய மூவரும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வலப்பனை – மந்தாரநுவர – எலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த கணவன், மனைவியான டி.பி.ரூபசிங்ஹ (வயது 50) மற்றும் ரோஹினி குமாரி (வயது 45) ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். எலமுல்லை பிரதேசத்திலிருந்து நுவரெலியாவை நோக்கி குறித்த தாய், தந்தை மற்றும் 6,16,19 வயதுடைய பிள்ளைகள் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்திற்கு
 இலக்காகியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - உலுக்கிய கோர விபத்து..!! பெற்றோர் ஸ்தலத்தில் பலி…

திடீரெனக் கொட்டிய மழை…வவுனியாவில் பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று பிற்பகல் 12.30 மணி
 தொடக்கம் 2 மணிவரை மழை தொடர்ச்சியாக கன மழை பெய்துள்ளது.   கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் இதனால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - திடீரெனக் கொட்டிய மழை…வவுனியாவில் பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்

பெண்ணொருவர் ஒடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை..

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஓடும் ரயிலின் முன் பாய்ந்து 41 வயதுடைய பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வாதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹோந்தரமுல்ல பாடசாலைக்கருகில் 
குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த புகையிரதத்திற்கு 
முன்பாகப் பாய்ந்தே, குறித்த பெண் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.

READ MORE - பெண்ணொருவர் ஒடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை..

ழ் சுதுமலை அம்மன் கோவிலில் இடம்பெற்ற வித்தியாசமான அன்னதானம்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

சுதுமலை அம்மன் கோவிலில் நடைபெற்றஒரு அன்னதான நிகழ்வில் கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முற்றிலும் இயற்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அடியவர்களிற்கு அன்னதானம் 
வழங்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் அன்னதானங்களின் ஊடாக பிளாஸ்ரிக், பொலித்தீனுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவிய , அன்னதான நிகழ்வை நடத்திய குடும்பங்களுக்கு பலரும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துவருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - ழ் சுதுமலை அம்மன் கோவிலில் இடம்பெற்ற வித்தியாசமான அன்னதானம்

இலங்கை பழங்கள், காய்கறிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது

புதன், 26 ஜூன், 2019

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள்
இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான உழைப்பின் மூலம் கடந்த ஆண்டு மேற்படி தரச்சான்றிதழ்கள் பெறப்பட்ட நிலையிலேயே இவ்வாறான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


READ MORE - இலங்கை பழங்கள், காய்கறிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது

முடங்கியது இலங்கையில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தொடரும் பதற்ற நிலையை தவிரப்பதற்காக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதற்றத்தை மேலும் கூட்டும் நோக்கில் சமூகவலைத்தளங்களில் போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர வேண்டாம் என்றும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக மத , இன வாதங்களைத் தூண்டும் செய்திகளும் பதிவுகளும் பகிரப்படுவதனால் சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடரும் தொடர்குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவை அதிகமாக பகிரப்படுவதால் முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - முடங்கியது இலங்கையில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்

இரத்தம் வழங்கக் குவியும் குருதிக் கொடையாளர்கள்

குருதிக்கான தட்டுப்பாட்டையடுத்து விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பல ஆயிரக் கணக்கான குருதிக் கொடையாளர்கள் நாட்டின் பல குருதி வங்கிகளில் கூடியுள்ளனர்.
இதனால் குருதி போதியளவு கிடைத்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் 
அறிவித்துள்ளார்.
பெற்றோர் பாதுகாவலரை இழந்து குழந்தை ஒன்று வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் காட்சியாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் தற்போது குருதிக் கொடையாளர்களிடம் இருந்து குருதி சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குருதி தேசிய குருதி வங்கி ஊடாக தேவைப்படும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படும் 
எனக் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று காலை 6 இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 600இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இரத்தம் வழங்கக் குவியும் குருதிக் கொடையாளர்கள்