ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள்
இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான உழைப்பின் மூலம் கடந்த ஆண்டு மேற்படி தரச்சான்றிதழ்கள் பெறப்பட்ட நிலையிலேயே இவ்வாறான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக