வாகனங்களை வீதியில் திருத்த வேலை செய்பவர்கள் மீது பாயும் சட்டம்

சனி, 9 ஜூன், 2018

போக்குவரத்து இடையூறாக வாகனங்களை நிறுத்தி திருத்த வேலைகளை மேற்கொள்ளும் வாகன திருத்தும் நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வவுனியா நகரசபை தலைவர் 
இ.கௌதமன் தெரிவித்தார்.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வாகன திருத்தகங்கள் போதிய இடவசதியின்றி வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி திருத்துவதனால் பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன்
 தெரிவித்தார்.
தாண்டிக்குளம், பூந்தோட்டம், இறமபைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள வாகன திருத்தகங்களை நேரடியாக சென்று பார்வையிட்ட நகரசபை தலைவர் அடங்கிய குழுவினர் குறித்த திருத்தகங்களின் உரிமம் மற்றும் இடவசதிகள் 
தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார்.
இதன் பின்னர் நகரசபை தலைவர்  கருத்து தெரிவிக்கையில்
வீதிகளில் வைத்து வாகனங்களை பழுதுபார்க்கும் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைத்தவண்ணமுள்ளது. அத்துடன் அதனால் ஏற்படும் பாதிப்புகள் வாகனத்தின் கழிவு எண்ணை நிலத்தடி நீரில் கலப்பது தொடர்பாகவும் முறைப்பாடு கிடைத்து வருகின்றது. 
இவற்றை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளதனால் இதற்குமப்பால் வீதிகளில் வைத்து வாகனங்களுக்கான டயர் மாற்றுமு; கடைகள் காணப்படுவதுடன் பாதசாரி கடவைகளை ஆக்கிரமித்தும் அவர்கள் வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் பெரும் இடையூறுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். எனவே பொலிஸாரின் உதவியுடன் விரைவில் நடவடிக்கை 
எடுக்கப்படும்.
அத்துடன் சகல வர்த்தக நிலையங்களிற்குமான வியாபார  அனுமதியினை 07ம் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ள வேண்டும். வியாபார அனுமதி முடிவடைந்தவர்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதுடன் குறித்த காலப்பகுதிக்குள் உரிய நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 
தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







READ MORE - வாகனங்களை வீதியில் திருத்த வேலை செய்பவர்கள் மீது பாயும் சட்டம்

கிளிநொச்சி இளைஞன் தாமரைக்கோபுரத்திலிருந்து விழுந்து பலி

கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.
தாமரைக் கோபுரத்தின் மின் உயர்த்தி நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே 13ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞன் உயிரிழந்தார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே
 இவ்வாறு உயிரிழந்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கிளிநொச்சி இளைஞன் தாமரைக்கோபுரத்திலிருந்து விழுந்து பலி

அன்பினால் ஏற்பட்ட வினை கத்திக்குத்தில் முடிந்தது

செவ்வாய், 5 ஜூன், 2018

மாத்தளை நகரத்தில் காணப்படும் உல்லாசவிடுதியொன்றில் வைத்து நபரொருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கத்தியால் குத்திய நபர் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இது குறித்து அவர்கள் மேலும் தெரியவருவதாவது;
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகரப்பகுதியில் காணப்படும் விடுதியொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.இந்நிலையில், கத்தியால் குத்திய நபரை கைதுசெய்துள்ள மாத்தளை பொலிஸார் அவரை இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளதாகவும், அடிக்கடி இருவரும் ஒரே வீட்டில் தங்கியதாகவும் மாத்தளை நகரில் காணப்படும் சில்லறை
 கடையொன்றில் ஒன்றாக பணியாற்றுபவர்கள் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.மேலும், இச்சம்பவத்தில் கத்திக்குத்துக்கிலக்கானவர் இரத்தினபுரியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படும் நிலையில், தாக்குதலை மேற்கொண்டவர் மாத்தளை நகரை சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல்தாரியை கைதுசெய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சம்பவத்தில் கத்திக்குத்துக்கிலக்கானவர் குறித்த சில்லறைகடையிலிருந்து விலகி வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றதாகவும் இதனை விரும்பாததன் காரணமாகவே இவ்வாறு கத்திகுத்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்துக்குள்ளானவர் வெளிநாடு செல்ல ஆயத்தமாகிய விடயம் குறித்து பல நாட்களாக இருவரிடையேயும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதன்போது மாத்தளை நகரிலுள்ள விடுதியில் அறையொன்றில் தங்கியுள்ள இருவரும் இவ்விடயம் தொடர்பில் மீண்டும் நள்ளிரவை தாண்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இறுதியாக வெளிநாட்டுக்கு செல்ல ஆயத்தமாகியவர் கத்தியால்
 தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது இருவரிடையே ஏற்பட்ட மோதலில் சத்தம் கேட்டு ஓடி வந்த விடுதியின் பணியாளர்களினால் கத்திக்குத்துக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கட்ட நிலையில் கத்திக்குத்துக்கிலக்கானவர் மாத்தளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிடைத்துள்ள தகவலை கொண்டு பார்க்கையில் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்களா? என்ற சந்தேகமும் 
பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையிலேயே, குறித்த நபரை கைதுசெய்த பொலிஸார் அவரை மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - அன்பினால் ஏற்பட்ட வினை கத்திக்குத்தில் முடிந்தது

திருகோணமலையில் விதவைப் பெண் கற்பழிப்பு

திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 5 பிள்ளைகளின் தாயான விதவைப் பெண்ணுக்கே இந்த 
அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் மற்றும் நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட் நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் குறித்த பெண்ணை பொலிஸாரின் உதவியுடன் தோப்பூர் வைத்தியசாலை ஊடாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.தற்போது, அவரால் பேசமுடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் பல தவறான இளைஞர்கள் பங்குகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.குறித்த பெண்ணை அவர்கள் பலாத்காரம் செய்து இறுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யவும் துணிந்துள்ளார்கள்.
5 பிள்ளைகளின் தாயான குறித்த விதவைப் பெண்ணை பலர் சேர்ந்து இவ்வாறு சிதைத்து அவரைக் கொல்லத் துணிந்துள்ளமை பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.இந்த சம்பவம் பல பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்விடயத்தில் இன, மத, சாதி ஏற்றத்தாழ்வு பாராமல் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அவ் அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - திருகோணமலையில் விதவைப் பெண் கற்பழிப்பு

கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ் கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கேரள கஞ்சா  (04.-06-2018.) கைப்பற்றப்பற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
குறித்த கஞ்சாவினை கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார்
 தெரிவிக்கின்றனர். 


சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
நேற்று (03) இரவு கைதடி பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே 4 கிலோ கிராம் கஞ்சா கைப்ப
ற்றப்பற்றுள்ளது. 
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

சிறிய ரக பாரவூர்தி திடீரென தீப்பற்றியது ஓட்டுனர் மருத்துவமனையில்

திங்கள், 4 ஜூன், 2018

கொழும்பின் வெளிப்புற சுற்றுவட்ட அதிவேக வீதியின் கொட்டாவை மற்றும் அதுருகிரிய பரிமாற்று மையத்திற்கு இடையில் சிறிய ரக பாரவூர்தியொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் பாரவூர்தியின் சாரதி எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் , ஹோமாகமை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
விபத்துக்குள்ளான பாரவூர்தி தற்போதைய நிலையில் அதுருகிரிய பரிமாற்று மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவல் இயந்திர கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சிறிய ரக பாரவூர்தி திடீரென தீப்பற்றியது ஓட்டுனர் மருத்துவமனையில்

யாழில் பாதுகாப்பற்ற கேபிள் இணைப்புகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

வெள்ளி, 1 ஜூன், 2018

யாழ். மாவட்டத்தில் கேபிள் இணைப்புகளை வழங்குவதற்கான பிரத்தியேக கம்பங்கள் எவையும் நடப்படவில்லை.
இலங்கை மின்சார சபை மின் விநியோகத்திற்காக அமைத்துள்ள மின் கம்பங்கள் ஊடாகவே கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கேபிள் இணைப்புகள் பாதுகாப்பற்ற வகையில் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளமையினால், பல்வேறு ஆபத்துகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.
மின்சார கம்பிகளுடன் கேபிள் கம்பிகள் உராய்வதனால், மின் ஒழுக்கு ஏற்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறு கேபிள் இணைப்பிலிருந்து பரவிய மின்சாரம் தாக்கியதில், நெல்லியடி - நாவலர்மடம் பகுதியைச் சேர்ந்த தந்தையும் மகனும் கடந்த செவ்வாய்க்கிழமை (22) காலை உயிரிழந்தமை
 குறிப்பிடத்தக்கது.
வடமராட்சியில் மாத்திரம் இவ்வாறு மின்சாரம் தாக்கி, கடந்த காலங்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் கூறினார்.
மற்றுமொரு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னர், பாதுகாப்பற்ற வகையில் மின்கம்பங்களுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ள கேபிள் இணைப்புகளை அகற்றுமாறு மக்கள் வேண்டுகோள் 
விடுத்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் மின்கம்பங்களூடாக கேபிள் இணைப்புகள் வழங்கப்படுவது தொடர்பில் அறிந்திருக்கவில்லை எனவும் ஆராய்ந்து பார்ப்பதாகவும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சின் ஊடகப்பேச்சாளர்  தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழில் பாதுகாப்பற்ற கேபிள் இணைப்புகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்