நாட்டில் மட்டக்களப்பு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்

புதன், 22 மே, 2024

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை 
பிரசவித்துள்ளார்.
மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் பெ.மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் 
கலந்துகொண்டனர்.
இவ்வாறு ஒரு சூழில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் அம்மாக்களிலேயே இடம்பெறுவதாகவும், அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே 
அவ்வாறான விடயமும் சாத்தியமாக காணப்படும் நிலையில், 
இயற்கையான கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்த 
தாய் பிரசவித்தானது மருத்துவ துறையில் மிகவும் 
அரிதான விடயமாக பார்க்கப்படுவதாகவும், 
அத்துடன் பிறந்த நான்கு 
குழந்தைகளும் மிகவும் சுகதேக ஆரோக்கியத்துடன் 
உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 
மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மட்டக்களப்பு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்

நாட்டில் கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய ரயில் பாதைகள் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை

செவ்வாய், 21 மே, 2024

நாட்டில்கடும் மழை காரணமாக கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகப் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று (21) கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் சேவையில் ஒரு நாளைக்கு நான்கு ரயில்கள் செயற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய ரயில் பாதைகள் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம்

திங்கள், 20 மே, 2024

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதில் 650 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைகள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களில் சுமார் 200 பேரை அரசு நிறுவனங்களுக்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தின் பழைய உள்கட்டமைப்பை
 நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் தற்போதுள்ள முதலீட்டுத் தேவையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகிறது.
 குறைந்தபட்சம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம்

சுவிஸ் குடிமக்களைவிட அதிக சுவிட்சர்லாந்தில் ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்

ஞாயிறு, 19 மே, 2024

எல்லை கடந்து சுவிட்சர்லாந்துக்குப் பணி செய்யவருவோர் உட்பட, வெளிநாட்டவர்கள், சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறுவதாக  தெரிவிக்கப்படுகிறது. 
நேற்று முன் தினம் வெளியான பெடரல் புள்ளியியல் அலுவலக தரவுகள் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளன. 
. சில துறைகளில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் மட்டும் சுவிஸ் குடிமக்களை விட அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்கின்றன அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியாகியுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சுவிஸ் குடிமக்களைவிட அதிக சுவிட்சர்லாந்தில் ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை

சனி, 18 மே, 2024

நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு 
ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது.
வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் பயணிக்கும் ஆண் பயணி ஒருவர் தான் மணமகன் என்றும் திருமணம் செய்துகொள்ள பயணிப்பதாகவும் சக பயணிகளுக்கு கூறியுள்ளார்.
தனக்கு திருமண சடங்கில் பதற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என புலம்பி உள்ளார். அப்போது அதனை கேட்ட விமான பணிப்பெண்கள் நடுவானிலேயே திருமண சடங்கு ஒத்திகையை அந்த வாலிபருக்காக 
ஏற்பாடு செய்தனர்.
விமான பணிப்பெண் ஒருவர் புதுபெண்போல அலங்கரிக்கப்பட்டு அந்த வாலிபருடன் திருமண சடங்கில் ஈடுபட்டதுடன் , இருவரும் முத்தங்களை பரிமாறி திருமண சடங்கை நிறைவு செய்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை

நாட்டில் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

வெள்ளி, 17 மே, 2024

நாட்டில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம்
 அறிவித்துள்ளது.
இந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மீனவ மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

வியாழன், 16 மே, 2024

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக 
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரிவுக்குட்பட்ட பல ஊழியர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரிகளுடன் 15-05-2024.அன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
தொழிற்சங்க பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்க
 பிரதிநிதிகளும் அமைச்சரிடம் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.  
அதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அடுத்த வருடம் அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பு செய்யப்படுமானால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது.    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்