அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டம்

செவ்வாய், 14 மே, 2024

அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் 
வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை 
செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 350 எமிரேட்ஸ் திர்ஹாம் அறவிடப்படவுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கக்கூடிய பறக்கும் டாக்ஸி சேவையானது சாதாரண பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு 
மணித்தியாலம் எடுக்கும் தூரத்தை 10 நிமிடங்களில் பூர்த்தி
 செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்றின் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்த டாக்ஸி சேவை, நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கபப்டுகின்றது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டம்

நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் காலணிகள் பாரிய மோசடி அம்பலம்

திங்கள், 13 மே, 2024

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட காலணிகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்யும்
 பாரியளவிலான காலணி கடத்தல் தொடர்பில் தகவல்
 வெளியாகியுள்ளது.  
உரிய வரியை செலுத்தாமல் சில சுங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு இவர்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக
 குறிப்பிடப்படுகின்றது. 
வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு ஜோடி காலணிக்கு குறைந்தது 2000 ரூபா வரி
 அறவிடப்படுகிறது.
 உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காலணிகளை விட, இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு காலணிகளே சந்தையில் மிகவும் குறைந்த விலையில் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் காலணிகள் பாரிய மோசடி அம்பலம்

நாட்டில் வவுனியாவில் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா கொண்டாட்டம்

ஞாயிறு, 12 மே, 2024

நாட்டில் வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா.12-05-2024. இன்று 
இடம் பெற்றிருந்தது.  
இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாகவ விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.  
மேலும் கலை நிலா கலையகத்தினால் குளக்கரையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நாடக ஆற்றுககையும்
 இடம் பெற்றிருந்தது.  
சுயாதீன இளைஞர்களினால் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற குறித்த நிகழ்வில் பெருமளான இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு நுங்குகளை பருகி மகிழ்ந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வவுனியாவில் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா கொண்டாட்டம்

குழந்தை பிரசவித்த சிறுமி யாழில் குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்

சனி, 11 மே, 2024

 

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு
 தப்பிச் சென்றுள்ளார்.
வடமராட்சி- துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது
 சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த
 நிலையில் தனது
 தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக  10-05-2024.அன்று  மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், 
குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு.11-05-2024. இன்று காலை முதல் தாயும், சிறுமியும் தலைமறைவாகியுள்ளனர் என
 தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் காவல் 
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - குழந்தை பிரசவித்த சிறுமி யாழில் குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்

மசகு எண்ணெய் விலையில் சர்வதேச சந்தையில் மாற்றம்

வெள்ளி, 10 மே, 2024


மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை 
பதிவு செய்துள்ளது.
 அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.88 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மசகு எண்ணெய் விலையில் சர்வதேச சந்தையில் மாற்றம்

நாட்டில் அதிகளவிலான வெப்பத்தால் பகல் நேர நடமாட்டத்தை தவிர்க்கும் மக்கள்

வியாழன், 9 மே, 2024

நாட்டில் கடும் வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொது மக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளதுடன் இரவு வேளை அதிகரித்து 
காணப்படுகின்றது.  
அடிக்கடி ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற இயல்பு நிலையுடன் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர
 வியாபாரங்கள் 
போன்றவைகள் வழமை போன்று இயங்கிய போதிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.  
மேலும் அரச தனியார் போக்குவரத்து குறிப்பிட்ட தூரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலும் மட்டுப்படுத்த மட்டில் இடம்பெற்றது. அதில் பயணம் செய்கின்ற பொதுமக்களின் எண்ணிக்கை 
குறைவாகவே உள்ளதை அவதானிக்க முடிகிறது.இது தவிர அரச தனியார் வங்கிகள் திறந்துள்ளதுடன் மக்கள் வருகை 
குறைந்தளவில் காணப்படுவதடன் சில இடங்களில் ஆர்வத்துடன் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர். கடந்த
 தினங்களுக்கு முன்னர் இம்மாவட்டத்தில் மழை
 திடிரென பெய்ததுடன் அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை
 அவதானிக்க முடிந்தது.  
சவளக்கடை மத்தியமுகாம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளின் வான்கதவுகள் தற்போது திறக்கப் பட்டுள்ளதால் அதிகளவான நீர் வாய்க்கால் ஊடாக வெளியேறுகின்றது.
இவ்வாறு வெளியேறும் நீரில் அதிகளவான மக்கள் வெப்பத்தை தணிப்பதற்கு குடும்பம் குடும்பமாக சுற்றுலா சென்று நீராடுகின்றனர். மேலும் பிரதேச செயலகங்கள் நீதிமன்றங்கள் வங்கிகள் பாடசாலைகளில் பரீட்சை நிலையங்கள் பிரத்தியேக வகுப்புகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் வழமை போன்று இயங்குகிறது. 
எனினும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பகல் நேரத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்ப்பதுடன் இரவு வேளையில் அதிகளவில் நடமாடி வருகின்றனர்.அத்துடன் பெரிய நீலாவணை, 
ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது,
 மாளிகைக்காடு, நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம்,உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டன.  
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் சில இடங்களில் முப்படையினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு 
வருகின்றனர்.
எனினும் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டி 
காணப்பட்டது. மேலும் வியாபார நிலையங்கள் சுப்பர் மார்க்கெட்டுகள் பாமசிகள் எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று
 திறக்கப்பட்டாலும் மக்கள் ஆர்வத்தடன் பொருட் கொள்வனவில் ஈடுபடவில்லை .  
 எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் 
தெரிவித்தமை என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் அதிகளவிலான வெப்பத்தால் பகல் நேர நடமாட்டத்தை தவிர்க்கும் மக்கள்

நாட்டில் வடமாகாணத்தில் நிலவும் கடும் வெப்பநிலையால் அவதிப்படும் மக்கள்

புதன், 8 மே, 2024

நாட்டில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் வீதியால் செல்வோருக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வவுனியா கிளையினர் குளிர்பானங்களை வழங்கியிருந்தனர்.
அண்மைக்காலமாக வட மாகாகணம் உட்பட பல இடங்களிலும் வெயிலின் உச்சத்தால்மக்கள் பெரும் அவதிப்படும்நிலை 
காணப்படுகின்றது.  
இந் நிலையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வவுனியா கிளையினர் வவுனியா மன்னார் வீதியில் செல்வோருக்கு 
குளிர்பானங்களை வழங்கியிருந்ததுடன் பலர் ஆர்வத்துடனும் வெயில் காரணமாகவும் குளிர்பானத்தை ஆவலுடன் வேண்டி பருகியதை 
காண முடிந்தது.என்பது குறிப்பிடத்தக்கதது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வடமாகாணத்தில் நிலவும் கடும் வெப்பநிலையால் அவதிப்படும் மக்கள்