நாட்டில் எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல்குறைப்பு

ஞாயிறு, 30 ஜூன், 2024

நாட்டில் எரிபொருள் விலையில்  30.06-2024.இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 
இதன்படி  ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய 
விலை 344 ரூபாவாகும். 
ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபாவாகும். ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டு 355 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
ஆட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன்படி, ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 317 ரூபாவாகவும் மண்ணெண்ணெய்யின் விலை 202 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக