இலங்கைக்கு 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
அயர்லாந்தின் டப்ளினில் இருந்து வந்த பால் ராய் 1,000,000 வது சுற்றுலாப் பயணி என்று பெயரிடப்பட்டது, அவருடன் பாட்ரிசியா ராய் என்ற
பெண்ணும் வந்துள்ளார்.
அவர்கள் இன்று மதியம் 12.40 மணியளவில் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக