திடீரென இலங்கையில் அதிகரித்த மரக்கறிகள் விலைகள்

சனி, 22 ஜூன், 2024

இலங்கையில் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென 
அதிகரித்துள்ளது. 
 மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 முதல் 750 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் மற்றும் மிளகாய் 500 முதல் 650 ரூபாய் வரையிலும், 
ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளதுடன் ஏனைய மரக்கறி
 வகைகள் அதிகளவில்
 உயர்ந்த நிலையில் உள்ளதாக பாவனையாளர் கூறுகின்றனர்.
 அத்துடன், ஒரு கிலோ கிராம் கரட் 460 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வெண்டைக்காய் 500 ரூபாவிற்கும், இஞ்சி ஒரு
 கிலோ 3,500 ரூபாவிற்கும், தேசிக்காய் ஒரு கிலோ 1,800 ரூபாவிற்கும் 
விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, கடந்த 
நாட்களில் 100 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள்.
22-06-2023. இன்று 300 முதல் 500 ரூபாவைக் கடந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
 கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளதால் மரக்கறிகளின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாகவே
 நாடளாவிய ரீதியில் இவ்வாறு மரக்கறிகளின் 
விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது மரக்கறிகள் நுகர்வோரின் தேவைக்கு
 ஏற்ற வகையில் வரத்து இல்லாததால் காய்கறிகளின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக